இந்தியாவில் தொடங்கப்பட்டுள்ள ஸ்டார்ட் அப்களில் சீன நிறுவனங்கள் கடந்த ஆண்டில் மட்டும் 200 கோடி டாலர் வரை முதலீடு செய்துள்ளன.
இந்தியாவில் விரிவடைந்துவரும் சந்தை மற்றும் குறைந்த செலவில் பணியாளர்கள் கிடைப்பது ஆகியவை காரணமாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பெய்ஜிங்கில் கடந்த வருடம் முதலாவது ஸ்டார்ட் அப் முதலீட்டாளர் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் இந்தியாவிலிருந்து 12 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் நான்கு நிறுவனங்களுக்கு சீன முதலீடு கிடைத்தது. 1.5 கோடி டாலர் அளவுக்கு முதலீடு திரட்டப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு இந்திய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
பெய்ஜிங் மிடெனோ கம்யூனிகேஷன் டெக்னாலஜி (மீடியா.நெட்), அலிபாபா (பேடிஎம்), அலிபாபாவுடன் பாக்ஸ்கான் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் சாப்ட்பேங் (ஸ்நாப்டீல்), சிடிரிப் (மேக் மை டிரிப்), டென்சென்ட் (ஹைக் அண்ட் பிராக்டோ), பைட்டான்ஸ் (டெய்லி ஹன்ட்) ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.