Skip to main content

வாடிக்கையாளர்களுக்கு மெம்பர்ஷிப் இந்த வருடமும் இலவசம் ...அறிவித்த ஜியோ நிறுவனம்!

Published on 13/05/2019 | Edited on 13/05/2019

இந்தியாவில் தொலைத்தொடர்பு துறையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நிறுவனம் (JIO NETWORK) தனது வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வருட மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கியுள்ளது. இத்தகைய இலவச மெம்பர்ஷிப்பை (JIO MEMBERSHIP) ஜியோ நிறுவனம் இலவசமாக வழங்காத பட்சத்தில் ஒவ்வொரு ஜியோ வாடிக்கையாளரும் ஆண்டுக்கு ரூபாய் 99-யை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் இதற்கான அறிவிப்பை ஒவ்வொரு வாடிக்கையாளரும் எளிதில் அறியும்  வகையில் ஜியோ மொபைல் ஆப்-க்கு (JIO MOBILE APP) சென்று 'மை-பிளான்' -ல் (JIO MY PLAN) ஜியோ நிறுவனம் ஒரு வருட மெம்பர்ஷிப்பை இலவசமாக வழங்கியுள்ளதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது .

 

JIO

 

 

இந்த மெம்பர்ஷிப்பால் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களும் ஜியோ மியூசிக்(JIO MUSIC), ஜியோ டிவி(JIO TV) உள்ளிட்ட ஜியோவின் துணை செயலிகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏற்கெனவே ஜியோவின் அடுத்த புரட்சியாக ஜியோ டிவி (JIO TV), ஜியோ இன்டர்நெட் உள்ளிட்டவற்றை இணைத்து ஒரே சந்தாவாக அறிவிக்க ஜியோ நிறுவனம் திவீரம் காட்டி வருகிறது. மேலும் பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல ஜியோ சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை தீவிரப்படுத்த ஜியோ நிறுவனம் அதிரடியாக இறங்கியுள்ளது. ஆகையால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து அடுத்தடுத்த துறைக்கு சென்று கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்