Skip to main content

ஒரு லட்சம் டன் சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்யும் இந்திய வர்த்தகர்கள்!

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

Indian traders import one lakh tonnes of soybean oil!

 

அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் டன் சோயா ஆயிலை இறக்குமதி செய்ய இந்திய வணிகர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர். 

 

சமையல் எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடான இந்தியா, சமையல் எண்ணெய்யை அதிகம் உற்பத்தி செய்யும் அர்ஜெண்டினா, பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது வழக்கம். ஆனால், அந்த நாடுகளில் வறட்சி காரணமாக, சோயா விதைகள் உற்பத்திக் குறைந்திருப்பதால் எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளது. அதேநேரம், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எண்ணெய்யின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. 

 

குறிப்பாக, இந்தோனேசியாவும் பாமாயில் விலையை அதிகரிக்கும் நோக்கில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், இந்திய வர்த்தகர்கள் அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் டன் சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்ய முடிவு செய்து ஒப்பந்தம் செய்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்