Skip to main content

ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்க இந்தியா ஒப்புதல் - சுஷ்மா சுவராஜ்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017

ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்க இந்தியா ஒப்புதல் - சுஷ்மா சுவராஜ்

ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு உதவிகளை அதிகரிக்க இந்தியா ஒப்புதலளித்துள்ளது. இது குறித்து சுஷ்மா சுவராஜ் கறியதாவது:

ஆப்கானிஸ்தானில் 116 புதிய அதிக பலனை அளிக்கக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இதன்மூலம் அங்கு சமூக, பொருளாதார, கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என்றார். முன்னதாக தில்லியில் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சலாஹுதீன் ரப்பானியும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் இருதரப்பினரும் 4 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதில் முக்கியமாக ஆப்கானிஸ்தான் நாட்டு பாதுகாப்பு படைகளுக்கு மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்குவது, வளர்ச்சிப் பணிகளுக்கான  உதவிகள் ஆகியவை அடங்கும்.

சார்ந்த செய்திகள்