Skip to main content

பணம் கொடுத்து திருமணத்திற்கு மணமகளை வாங்கிச்செல்லும் அவலம்...

Published on 10/09/2019 | Edited on 10/09/2019

ஹரியானா மாநில இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் அண்டை மாநிலங்களிலிருந்து பெண்களை விலைக்கு வாங்கி வந்து திருமணம் செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

haryana marriage market

 

 

1980 மற்றும் 1990 களில் ஹரியானா மாநிலத்தில் பெண்சிசுக்கொலைகள் அதிகளவில் நடந்தன. அதன் விளைவாக தற்போது உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பெண்களை தேடி கண்டுபிடித்து அவர்களின் படிப்பு, குடும்ப சூழல், அழகு  உள்ளிட்டவற்றிற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களின் குடும்பத்திற்கு வழங்கி, அந்த பெண்ணை அழைத்து வந்து திருமணம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சராசரியாக ரூ.35,000 முதல் ரூ.1,50,000 வரை பணம் கொடுக்கப்பட்டு பெண்கள் திருமணத்திற்கு தயார் செய்யப்படுகிறார்கள். ஆனால் இதனால் பணக்கார ஆண்களுக்கு திருமணம் முடிந்து விட்டாலும், ஏழை ஆண்களுக்கு பெண் கிடைப்பதில் சிக்கல் நீடிப்பதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் ஹரியானா மாநிலத்தில் பெண்கள் தட்டுப்பாடால் பிகார், அஸ்ஸாம், மேற்கு வங்கம், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், ஆந்திரா, ஹிமாச்சல், ஜார்க்கண்ட், ஒடிஸா, மத்தியப் பிரதேசம், நேபாளம் வரை பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களை வரதட்சணைக் கொடுத்து வாங்கி வரும் நிலை உருவாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்