உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் குஜராத்தில் அமையப்போகிறது. இதுவரை உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் இருந்து வருகிறது. ஆனால், அதனை மிஞ்சும் வகையில் குஜராத் மாநிலத்தில், அகமதாபாத் அருகே கட்டமைக்கப்பட்டுவருகிறது. இதற்கு சர்தார் படேல் குஜராத் ஸ்டேடியம் என பெயரிடப்பட இருக்கிறது. தற்போது இது கட்டுமானப் பணிகளில் இருக்கிறது. இது முடிவதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டால் உலகிலே பெரிய கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் குஜராத் கிரிக்கெட் மைதானமாகத்தான் இருக்கும்.
இந்த மைதானம் 63 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 90,000 நபர்கள் வரை கூடலாம். ஆனால், குஜராத் மைதானத்தில் 1,10,000 பேர் வரை கூடும் வசதியுடன் அமைக்கப்பட்டுவருகிறது. மேலும் 3,000 கார்கள் மற்றும் 10,000 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை தலைவர் பரிமல் நத்வானி (Parimal Nathwani) அவரின் ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.