Published on 22/12/2020 | Edited on 22/12/2020
இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் பங்குகளை விற்க கடந்தாண்டு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் கரோனா தொற்று பரவல் காரணமாக பங்குகளை விற்கும் நடைமுறை தாமதமானது.
இந்நிலையில் மத்திய அரசு, கப்பல் போக்குவரத்துக் கழகத்தின் 63.75 சதவீத பங்குகளை விற்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசு தனது 296.9 மில்லியன் பங்குகளை வாங்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், அதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க அடுத்தாண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது 63 சதவீத பங்குகளை விற்பதால், இந்தியக் கப்பல் போக்குவரத்துக் கழகம் தனியார்வசம் செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.