Skip to main content

ப.சிதம்பரத்தின் கோடிக்கணக்கிலான சொத்துக்கள் முடக்கம்....

Published on 11/10/2018 | Edited on 11/10/2018
bunglow


ஐஎன்எக்ஸ் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. 
 

இந்த வழக்கில் சம்மதப்பட்ட இவர்கள் இருவரின் சொத்துக்கள் என்று சொல்லப்படும் புதுடில்லியில் இருக்கும் ஜோர்பாஹ், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இருக்கும் பங்களா, லண்டனில் இருக்கும் வீடுகள், பார்சிலோனாவில் இருக்கும் சொத்துக்கள் என்று சுமார் ரூ. 54கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 2 கோடி கட்டிவிட்டு வெளிநாடு செல்லலாம் - கார்த்தி சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

KARTI CHIDAMBARAM

 

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தனித்தனியாக வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தநிலையில் கார்த்தி சிதம்பரம், வெளிநாடு செல்ல அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இரண்டு கோடி ரூபாய் பிணைத்தொகையாக கட்டிவிட்டு வெளிநாடு செல்ல கார்த்தி சிதம்பரத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம், தான் எங்கெங்கு செல்லவுள்ளார் என்பதையும், எங்கு தங்கவுள்ளார் என்பதையும் நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஏற்கனவே கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தின் அனுமதி பெற்று அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யகோரிய மனு தள்ளுபடி

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
 Petition for cancellation of PC Chidambaram's bail dismissed

 

ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த முறைகேட்டு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்துக்கு ஜாமீன் அளித்ததை எதிர்த்து சிபிஐ மனுத் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில் சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சிபிஐ தாக்கல் செய்த மனுவை தற்போது உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.