Skip to main content

குழந்தைகளுக்கான பால் புட்டியில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள்!

Published on 17/05/2019 | Edited on 17/05/2019

குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் புட்டிகளில், புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் உடைய  , தடை செய்யப்பட்ட பிஸ்பினால்-ஏ என்ற வேதிப்பொருள் பாலூட்டும் புட்டிகளில் பயன்டுத்தப்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது என டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது. பிஸ்பினால்-ஏ என்பது, பிளாஸ்டிக் புட்டிகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் ஒன்று. உணவு பொருட்கள் அடைத்து வைக்கப்படும் பிளாஸ்டிக் புட்டிகளில் இந்த வேதி பொருள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்காக தயாரிக்கப்படும்  பால் புட்டிகளில் இந்த வகை வேதிப்பொருட்களை முற்றிலும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய நிர்ணய ஆணையம் 2015 ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

 

 

feeding bottle

 

 

குழந்தைகளுக்கு பிஸ்பினால்-ஏ வேதிப்பொருளை கொண்டும் தயாரிக்கப்பட்ட பாட்டில்களை பயன்படுத்தி உணவூட்டும் போது , வேதிப்பொருளானது உணவில் கலந்து இருக்கும். இந்த உணவை அருந்தும் குழந்தைகளுக்கு உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் தான் இந்திய தர நிர்ணய ஆணையம் இந்த வகை வேதிப்பொருளுக்கு தடை விதித்துள்ளது. உலக நாடுகள் பலவும் குழந்தைக்களுக்கான உணவுப் பொருட்களை இந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட புட்டிகளில் அடைத்து வைப்பதை தடை செய்துள்ளது. இருப்பினும்  இந்தியாவில் இத்தகைய பிஸ்பினால்-ஏ பயன்படுத்தி பால் புட்டிகள் தயாரிக்கப்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக டாக்சிக் லிங்க் அமைப்பு கூறியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்