Skip to main content

ஆன்லைன் விளையாட்டிற்கான நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Published on 03/01/2023 | Edited on 03/01/2023

 

central government has issued  code conduct for online gaming

 

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தினால் இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து,  தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்த நிலையில், அவர் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். 

 

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு தொடர்பாக வரையறுக்கப்பட்ட நெறிமுறைகளை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், "ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் இணைய முகவரியை விளையாடுபவர்கள் சரிபார்க்கும் வகையில் அமைத்தல் அவசியம். பதிவு செய்யப்பட உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை பதிவு செய்யலாம். ஆன்லைன் விளையாட்டுத் தளங்கள் இந்தியாவின் சட்டங்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும்.

 

ஆன்லைன் விளையாட்டில் பங்கேற்போர் இந்திய சட்ட விதிகளை மீறி ஆன்லைன் விளையாட்டுகளை ஹோஸ்ட் செய்யவோ வீடியோக்களை வெளியிடவோ மற்றவர்களுக்கு பகிரவோ கூடாது என்பதை அந்தந்த இடைத்தரகர்கள் கண்காணிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளிலும் பதிவு முத்திரையை நிறுவனங்கள் காண்பிக்க வேண்டும். வைப்புத்தொகையைத் திரும்பப் பெறக்கூடிய வசதியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
PM Modi's conversation with online sportspersons

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில் நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் (வீரர்கள்) பிரதமர் மோடி இன்று (13.04.2024) கலந்துரையாடினார். இந்தியாவில் கேமிங் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் 7 ஆன்லைன் கேமர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “கேமிங் துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.