Skip to main content

பி.எஸ்.எல்.வி சி52 ராக்கெட்: மூன்று செயற்கைக்கோள்கள் புவிவட்டப் பாதையில் நிலைநிறுத்தம் 

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

pslv c52

 

பி.எஸ்.எல்.வி சி52 ராக்கெட் இன்று அதிகாலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. 

 

1710 கிலோ எடை கொண்ட பி.எஸ்.எல்.வி சி52 ராக்கெட்டானது, வானிலை மாற்றம் மற்றும் மழை வெள்ள பாதிப்புகளை துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ.ஓ.எஸ்-04 ரிசாட் 1ஏ என்ற செயற்கைக்கோளையும், கொலராடோ பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து வடிவமைத்த இன்ஸ்பயர் சாட் 1 என்ற சிறிய ரக செயற்கைக்கோளையும், இந்தியா - பூடான் இணைந்து வடிவமைத்த ஐ.என்.எஸ். 2டிடி என்ற செயற்கைக்கோளையும் சுமந்து கொண்டு விண்ணில் பாய்ந்தது. இந்த மூன்று மூன்று செயற்கைக்கோள்களும் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

இது, இஸ்ரோவின் புதிய தலைவராக எஸ்.சோமநாத் பதவியேற்ற பிறகு விண்ணில் செலுத்தப்பட்ட முதல் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்