Skip to main content

அதிகரிக்கும் கரோனா: இறுதி வாய்ப்பை நோக்கி நகரும் மாநிலங்கள்!

Published on 04/05/2021 | Edited on 04/05/2021

 

 lockdown

 

இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ள நிலையில், கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவை கட்டுப்படுத்துவதில் கடைசி வாய்ப்பாகத்தான் ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்திய நிலையில், கரோனா பாதிப்பு தீவிரமானதால், டெல்லி, கர்நாடகா, ஒடிஷா, மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன.

 

ஆந்திராவில், மதியம் 12 மணிக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில், தற்போது பீகார் மாநிலத்திலும் மே 15ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். மேலும், ஊரடங்கு விதிமுறைகளை வகுக்கவும், அவற்றைக் கையாளவும் குழு ஒன்றை நிதிஷ் குமார் அமைத்துள்ளார்.

 

முன்னதாக பாட்னா உயர் நீதிமன்றம், பீகார் அரசு கரோனா நிலையைக் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பு எனவும் விமர்சித்ததோடு, இப்போது முழு ஊடங்கு தேவையென்றும், அரசு அமல்படுத்தாவிட்டால் அதற்கான உத்தரவை தாங்கள் பிறப்பிக்க நேரிடும் எனவும் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்