/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fgr3eg.jpg)
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்கட்ட சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், இந்த முதல்கட்ட தேர்தலில் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பாஜக, காங்கிரஸ் மட்டுமில்லாமல், மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சியும் இந்த தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.
சலாம் ஜாய் சிங் என்ற அந்த வேட்பாளர், பாஜக வேட்பாளரை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)