Skip to main content

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி...

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது. வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களைவிட, மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
 

result


புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 16,520 மாணவ, மாணவிகள் எழுதினர். இந்நிலையில்  நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மொத்தமாக 97.57 சதவீதம் தேர்ச்சியடைந்துள்ளன. அதில் மாணவர்கள் 96.53 சதவீதம் பேரும், மாணவிகள் 98.60 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில் அரசு பள்ளிகள் 94.85 சதவீதமும், தனியார் பள்ளிகள் 98.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வு எழுதிய 16,520 மாணவ, மாணவிகளில் 16,119 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மொத்தமுள்ள 302 பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்