Published on 19/03/2021 | Edited on 19/03/2021

உலகின் பல்வேறு நாடுகளிலும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் உள்ளிட்ட செயலிகள் திடீரென முடங்கியதால், தகவல்களைப் பரிமாறிக் கொள்ள முடியாமல் பயனர்கள் தவித்தனர். வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் முடங்கியது குறித்த தகவல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
இந்நிலையில், வாட்ஸ் அப் சேவை, சுமார் 43 நிமிடங்கள் முடங்கியிருந்த நிலையில் மீண்டும் சீரானது. அதேபோல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் ஆகிய செயலிகளும் மீண்டும் செயல்படத் தொடங்கின.
உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.