Skip to main content

சாத்தான்குளம்... கைதான 5 போலீசாரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு...

Published on 13/07/2020 | Edited on 13/07/2020
mm

 

சாத்தான்குளத்தில் தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான ஐந்து போலீசாரை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதில் கைது செய்யப்பட்ட 10 பேரில், 5 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சிபிஐ, மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனுவினை தாக்கல் செய்தது. 

 

மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமந்த்குமாரிடம் சி.பி.ஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லா தலைமையில், 3 பேர் கொண்ட குழுவினர் நேரில் ஆஜராகி ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜா, முருகன் ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்தனர். 

 

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை காலை 11 மணிக்கு இந்த மனு மீதான விசாரணை நடைபெறும். அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், போலீசார் முத்துராஜா, முருகன் ஐந்து போலீஸாரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். இவர்கள் ஐந்து பேரும் தற்போது மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் நாளை காலை 11 மணிக்கு ஆஜர்படுத்தப்படுவார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்