Skip to main content

நிர்மலா தேவி வழக்கு - சிபிசிஐடிக்கு உயர்நீதிமன்றம் கெடு..!

Published on 12/07/2018 | Edited on 12/07/2018


நிர்மலா தேவி வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு உதவி பெறும் தனியார் கலை கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணி புரிந்தவர் நிர்மலாதேவி. இவர், தன்னிடம் படிக்கும் மாணவிகள் சிலரிடம் பாலியல் பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குரல் மாதிரி பரிசோதனைக்காக நிர்மலா தேவியை போலீஸார் அண்மையில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு மீண்டும் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

 

 

இந்நிலையில், நிர்மலா தேவி வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதற்கட்ட குற்றப்பத்திரிகையை வரும் 16ஆம் தேதி தாக்கல் செய்யவும், கூடுதல் மற்றும் இறுதி குற்றப்பத்திரிகையை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 24ஆம் தேதியிலிருந்து 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க கீழ் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்