Skip to main content

ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு

Published on 24/05/2018 | Edited on 24/05/2018
tk


    கீரமங்கலத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய 25 பேர் உள்பட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்ட 105 பேர்கள் மீது ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போராடிய போது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று அந்த மாவட்ட மக்கள் தொடர்ந்து 99 நாட்கள் போராடிய நிலையில் 100 வது நாள் போராட்டத்தின் போது பேரணியாக மாவட்ட ஆட்சியர் அலவலகம் நோக்கி சென்ற போது போலிசார் தடுத்ததால் ஏற்பட்ட கலவரத்தில் போலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த போராளிகளுக்கு கீரமங்கலத்தில் நாம்தமிழர் கட்சியின் மாவட்ட தலைவர் துரைப்பாண்டியன் தலைமையில் உயிரிழந்தவர்களின் படங்கள் அடங்கிய பதாகைக்கு மெழுகுவர்த்தி ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி கலைந்து சென்றனர். அதில் துரைப்பாண்டியன் உள்பட 25 பேர்கள் மீதும் கொத்தமங்கலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலை முதலாளி ஆகியோர் உருவ பொம்மை எரித்ததாக விவசாய சங்கம் துரைராசு தலைமையில் 30 பேர்கள் மீதும் ஹைட்ரோ கார்ப்பனுக்கு எதிராக போடிய போது பதிவு செய்யப்பட்ட அனுமதி இன்றி பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக பிரிவுகளில் கீரமங்கலம் போலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 

    அதே போல புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 12 பேர், கோட்டைப்பட்டிணத்தில் 5, பேர், கந்தர்வகோட்டையில் 8 பேர், பொன்னமராவதியில் 25 பேர், கீரமங்கலம் 55 பேர் என மொத்தம் 105 பேர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

 

இது குறித்து நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் எதிர்ப்பு போராட்டகுழுவை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார் கூறும் போது.. நெடுவாசலில் எப்படி ஹைட்ரோ கார்ப்பன் திட்டம் வேண்டாம் என்று போராடினோமோ அதே பொல தான் தூத்துக்குடி மக்களும் போராடினார்கள். அவர்களை இப்படி சுட்டுக் கொன்றதற்கு நீதி வேண்டும் என்றும் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றிஅ ஞ்சலி செலுத்துவதும் எப்படி பொதுமக்களுக்க இடையூறாக இருக்க முடியும். அதற்காக வழக்கு போடுவது போராட்டக்காரர்களை மிரட்டுவது போல உள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட ஒன்று சேரக் கூடாது என்று தடுக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

 

    இப்படித் தான் நெடுவாசல் ஹைட்ரோ கார்ப்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்தது. ஆனால் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த மாவட்ட நிர்வாகம் யார் மீதும் வழக்கு போடமாட்டோம் என்று சொல்லிவிட்டு இப்போது 62 பேருக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. அதே பிரிவுகளில் இப்போது அஞ்சலி செலுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றார்.

சார்ந்த செய்திகள்