Skip to main content

'எனக்கு பெட்டிச் செய்தி; ரஜினிக்கு தலைப்பு செய்தி' - சீமான் ஆவேசம்!

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகஸ்ட் 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட செங்கொடி நினைவாக நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் மத்திய அரசை கடுமையாக சாடி பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போதும், " பல பேருக்கு நம்மை பார்த்தால் இப்போது சிரிப்பாக இருக்கிறது. எல்லாம் கொஞ்ச காலம்தான். காலம் விரைவில் மாறும். கட்டளை இடும் இடத்திற்கு வருவோம். ஜாதி, மதத்தால் நான் பெரியவன், நீ பெரியவன் என்ற வேறுபாட்டை சொல்பவர்களை காலம் நிச்சயம் புறந்தள்ளும். தலையில் பிறந்ததால் நாங்கள் உயர்வானவர்கள் என்று நீங்கள் சொல்லும்போது, காலில் பிறந்ததால் உங்களை உதைப்பதற்கு எளிதாக இருக்கும் என்று நாங்கள் ஏன் சொல்லக் கூடாது.

 

h



உலகத்தின் பேரறிஞர்களை உருவாக்கியவர்கள் நாங்கள். வள்ளுவனை தாண்டி இங்கே ஒருவரும் இல்லை. அவரை யாரும் அடித்துக் கொள்ள இன்றளவும் முடியவில்லை. அவன் ஒரு ஞானி. கம்பன், இளங்கோவனை தாண்டி பாவலன் யாராவது உள்ளார்களா? ஒருத்தனும் இல்லை. இதை பற்றி யாராவது பேசுகிறார்களா என்றால் இல்லை. ரஜினி படத்தின் வசனத்தை மனப்பாடமாக பேசுவதா நமக்கு பெருமை. பிரபாகரன், ரஜினி, அஜித், விஜய் இதில் யார் பெரியவங்கனு கேளுங்க. சினிமா நடிகர்களின் பெயர்களைதான் கூறுவார்கள். கேளிக்கையில், கொண்டாட்டத்திலும் மூழ்கியுள்ள சமூகத்தை போராட்டத்திற்கு கொண்டுவருவது சிரமம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் நாம் அதனை சீர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

17 லட்சம் போராளிகளை இதுவரையில் உருவாக்கி இருக்கிறோம். இது விரைவில் அதிகரிக்கும்.எதற்கெடுத்தாலும் வளர்ச்சி, வளர்ச்சி என்று கூறும் நீங்கள் ஒரு ஒரு தொகுதிக்கு தேர்தல் நடத்திவிட்டு எதற்காக 5 நாட்கள் காத்திருக்க வேண்டும். 5 ஆம் தேதி வாக்கு பதிவு முடிந்த உடனே, வாக்குகளை எண்ண வேண்டியதானே? அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. பதட்டத்திலேயே மக்களை வைத்து இருக்கனும். அதானே உங்கள் ஆசை. தீவிரவாதிகள் தமிழகத்திற்குள் ஊடுறுவல் என்கிறார்கள். அவர்கள் எங்கே இருந்து வந்தார்கள். எப்படி வந்தார்கள். வானத்தில் இருந்தா வந்தார்கள். அவர்கள் உள்ளே வரும் போது நீங்கள் என்ன செய்து கொண்டீருந்தீர்கள்.

நாம ஒரு காவலாளியை வீட்டின் பாதுகாப்புக்கு எதற்காக வைத்திருக்கிறோம். வீட்டில் இருந்து திருடன் திருடிவிட்டு செல்லும்போது அவனை துரத்தி பிடிக்க அல்ல. வீட்டிற்கு வரும்போதே அவனை பிடித்து கொடுக்கதான். ஆனால் தீவிரவாதிகள் உள்ளே வருவார்களாம், அப்போது அமைதியாக இருந்துவிட்டு, பாமரனிடம் பர்ஸை எடு, பாக்கெட்டை காட்டு என்று அலம்பல் தருகிறார்கள். நாட்டில் உள்ள எவ்வளவோ பிரச்சனைகளை மடைமாற்ற இதை ஒரு வழியாக இப்போது பயன்படுத்துகிறார்கள். நான் 40 தொகுதிகளில் போட்டியிடுவதை பெட்டி செய்தியா கூட போடமாட்டேன் என்கிறார்கள். ஆனால், ரஜினி தேர்தலில் போட்டியிடவில்லை என்பதை தலைப்பு செய்தியாக போடுகிறார்கள். முட்டாளா இருக்கலாம். ஆனால் இந்த அளவு முட்டாளா இருக்க கூடாது" என்றார்.

 

 

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

'நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்' - அதிகாரப்பூர்வமாக அறிவித்த சீமான்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
'Mike symbol for Naam Tamilar Party'-Seeman official announcement

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் நிலையில், சின்னம் தொடர்பான பிரச்சனையில் சிக்கியிருந்தது. சின்னம் உறுதியாகும் முன்னரே 40 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகப்படுத்தி இருந்தார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் கிருஷ்ணகிரி தொகுதியில் வீரப்பன் மகள் வித்யா ராணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி (mike) சின்னம் ஒதுக்கப்பட்டதை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், ''மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக செயல்படவில்லை. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒலிவாங்கி ( MIKE) சின்னத்தில் போட்டியிடும். நாம் தமிழர் எப்படி 7 விழுக்காடு வாக்கை பெற்றது என்பதுதான் எல்லோருக்கும் வியப்பு. இந்த தேர்தலில் என்ன நடக்கும் என ஜூன் 4 ஆம் தேதி பார்ப்போம்'' என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் மதிமுக போல விசிகவும் பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, ''மதிமுக, விசிக, பாஜக கூட்டணியில் இல்லை அதனால் சின்னம் கிடைக்கவில்லை. பாஜக கூட்டணியில் உள்ளதால் அமமுக டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னமும், த.மா.கா. ஜி.கே. வாசனுக்கு சைக்கிள் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தால் நாங்கள் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். ஒரு தொகுதியில் போட்டியிட்டால் பம்பரம் சின்னம் இல்லை என்று சொல்கிறதே தேர்தல் ஆணையம், திருமாவளவன் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரே அவர் கேட்கும் சின்னத்தை கொடுங்களேன். அறம் சார்ந்து நில்லுங்க'' என்று பதிலளித்தார்.