Skip to main content

ஊழலில் தொடர்புடையவரே கணக்கு தணிக்கை செய்யலாமா?

Published on 11/02/2019 | Edited on 11/02/2019

 

rr

 

ரஃபேல் விமான பேரம் நடைபெற்றபோது நிதித்துறை செயலாளராக இருந்த ராஜிவ் மெஹ்ரிஷி இப்போது தலைமை கணக்காளராக இருக்கிறார். இந்நிலையில், அவர் நடத்திய பேரம் குறித்து அவர் தலைமையிலான சிஏஜியே எப்படி நியாயமான ஆய்வறிக்கையை தயார் செய்ய முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபலும், குலாம் நபி ஆஸாத்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

ரஃபேல் விமான பேரத்தில் மத்திய நிதி்த்துறை அமைச்சகம் முக்கிய பங்காற்றியிருக்கிறது. விமானம் வாங்கிய சமயத்தில் நிதித்துறை செயலாளராய் இருந்த மெஹ்ரிஷி இப்போது சிஏஜி தலைவராக இருக்கிறார். விமான பேரத்தில் முக்கியமான ஆளாக செயல்பட்ட மெஹ்ரிஷி அரசியல் சட்ட ரீதியாகவும், தார்மீக அடிப்படையிலும், சட்டப்படியும் விமான பேரம் தொடர்பாக கணக்கு எடுக்கவும், அதுதொடர்பான ஆய்வறிக்கையை பொதுக்கணக்கு குழுவிலோ, நாடாளுமன்றத்திலோ சமர்ப்பிக்க தகுதியற்றவர் ஆகிறார் என்று இருவரும் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.

 

இதுதொடர்பாக மெஹ்ரிஷிக்கே இருவரும் கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அதில் எல்லா வகையிலும் தான் சார்ந்த விமான பேரத்தில் மத்திய அரசாங்கத்தை காப்பாற்றவே மெஹ்ரிஷி முயற்சி செய்வார் என்று கடுமையாக குறிப்பிட்டுள்ளனர்.