வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டு வர அவருக்கு ஒரு வாரத்திற்கும் மேலானது. தனக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்களிடம் அதிமுக இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருக்கலாம் என்று சொல்லி வருகிறாராம்.
இந்த நிலையில் புதிய நீதி கட்சியின் நிர்வாகிகள் ஏ.சி.சண்முகத்தை சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது, உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என முதலமைச்சசர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றமும் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 3 லட்சம் வாக்குகள் பெற்றீர்கள். இப்ப அந்த ஓட்டுகள் கொஞ்சமும் நமக்கு குறைய வில்லை. ஆகையால் அடுத்த எம்எல்ஏ, எம்பி தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டாம். உள்ளாட்சித் தேர்தலில் மேயர் வேட்பாளராக களம் இறங்குவோம். அதிமுகவும் இதற்கு ஒப்புக்கொள்ளும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
அதற்கு ஏ.சி.சண்முகம், நாடாளுமன்றத்திற்கு போவதுதான் எனது விருப்பம். அதோட் இந்த ஆட்சியில உள்ளாட்சித் தேர்தலெல்லாம் நடக்குமா? என்று தெரிவிக்க, எம்பியை விட பவர் புல்லான பதவி மேயர் பதவி. அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை வேலூர் மாநாகராட்சி மேயர் பதவியில் இருக்கலாம். உள்ளாட்சித் தேர்தல் நடக்கவில்லை என்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் வேலூரில் போட்டியிடுவோம். 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக நாம் உழைத்த உழைப்பு வீண்போகக்கூடாது என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து இதுகுறித்து அதிமுக தலைமையிடம், நீங்களே பேசுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.