Skip to main content

"ஹரி எங்க வீட்டுக்குள் வந்த பிறகுதான் குடும்பத்தில் பிரச்சனையே!" - வனிதா விஜயகுமார்

Published on 29/09/2018 | Edited on 29/09/2018

அதற்கு முன்பு வரை நட்சத்திர குடும்பம் என்று பெருமையாக பேசப்பட்ட நடிகர் விஜயகுமாரின் குடும்பம், ஏழரை வருடங்களுக்கு முன் முதல் முறையாக அவரின் மகளான வனிதா மூலம் பொதுவெளியில் எதிர்மறையான விஷயத்துக்காக பேசப்பட்டது. வனிதாவின் குடும்ப வாழ்வில் விரிசல், அவரது குழந்தைக்கான உரிமைப் போராட்டம் என அவ்வப்போது பொதுவெளியில் தன் பிரச்சனைகளைப் பகிர்ந்துள்ளார் வனிதா. சமீபத்தில் அவர் தங்கியிருந்த வீட்டை மையமாக வைத்து பிரச்சனை ஏற்பட்டது. தனக்கு சொந்தமான அந்த வீட்டிற்கு வனிதா ஷூட்டிங் எடுப்பதாகக் கூறி வந்ததாகவும் அப்படியே அதே வீட்டில் நிரந்தரமாக தங்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்து காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் கொடுத்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனைகளுக்கு எல்லாம் விஜயகுமாரின் மகன் நடிகர் அருண் விஜயும் மருமகன் இயக்குனர் ஹரியும்தான் காரணம் என்று நக்கீரனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வனிதா. நம்மிடம் அவர் பேசியது...                  

  

vvv

 

 

”ப்ரீத்தாவுக்கும் ஹரிக்கும் திருமணமாகி, ஹரி எங்கள் வீட்டுக்குள் வந்தபிறகுதான் எங்கள் குடும்பத்தில் பிரச்சனை வர ஆரம்பித்தது. முதலில் என் முதல் கணவரிடம் விவாகரத்து வாங்க முயற்சித்துக்கொண்டு இருக்கும்போது, அவருக்கும் எனக்கும் விவாகரத்து நடக்கக்கூடாது என்று ஹரி பிரச்சனை செய்தார். எங்கள் விவாகரத்து அவருக்கு மானபங்கம் ஆகிவிடும் என்று எங்கள் விவகாரத்தை தடுக்கப்பார்த்தார். ஆனால் எனக்கும் ஆகாஷுக்கும் இடையில் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டேபோனது. ஹரி எங்கள் விவாகரத்து கூடாது என்று சொன்னதை, என் அப்பா என்னிடம் நேரடியாக வந்து சொன்னார். உடனே நான், 'இது என் வாழ்க்கை ஹரி யார் முடிவெடுக்க, அதனால் இனி அவர் சொல்வதை எல்லாம் என்னிடம் எடுத்து வராதீர்கள்' என்று சொல்லிவிட்டேன். அப்போது ஹரிக்கு இன்டஸ்ட்ரியில் நல்ல மார்க்கெட், ஆனால் அருணுக்கு மார்க்கெட் கிடையாது. அதனால் அவர் சொல்வதைத்தான் நாங்கள் அனைவரும் கேட்க வேண்டும் என்னும் நினைப்பில் ஹரி இருந்தார். அதேபோல் என் அப்பாவிற்கும், ஹரியை வைத்து அருணுக்கு ஒரு படம் கொடுத்துவிட வேண்டும், அதனால் ஹரி சொல்வதற்கெல்லாம் என் அப்பா தலையாட்டிக் கொண்டிருந்தார்.  ஹரியின் கை காலில் விழுந்து அருணை வைத்து படம் எடுக்கும்படி கேட்டார். ஆனால் அவர் கடைசி வரை அருணை வைத்து படம் எடுக்கவில்லை. இது எல்லாம் எங்கள் குடும்பத்தில் நடந்த அரசியல்”  என்று இவ்வளவு பிரச்சனைகளுக்கும் தன் அண்ணனும் மைத்துனனும்தான் காரணம் என்று குறிபிட்டார்.

 

vv

 

 

அருணுக்கு படங்கள் அமையவில்லை என்றதும் அவனுக்கு ஒரு நல்ல பணக்காரக் குடும்பமாய் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். அப்படி நடந்தால் பொண்ணு வீட்டில் அருணை பார்த்துக்கொள்வார்கள் என்று கணக்கு போட்டாங்க. அதுபோலவே நடந்தது. ஆனால் எங்கள் வீட்டில் யாருக்கும் அந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை. அதன் பிறகு அருணை வைத்து ஏழு படங்களை அவரின் மாமனார் தயாரித்தார். அதனால் அவருக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்று எனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும்.

 

 

என் வீடு பிரச்சனை என்பதை எல்லாம் தாண்டி சில பேர் ஷூட்டிங்காக வந்தவங்க, இன்னிக்கு புழல் சிறையில் இருக்காங்க, அவங்களுக்காகவாது நான் போராடியாகணும். அன்னிக்கு இரவு நாங்க ஷூட்டிங் எடுத்துட்டு இருந்த வீட்டுக்குள் புகுந்து என்னுடன் இருந்த எல்லாரையும் அடித்து கைது செய்தனர். கைதானவர்கள் எல்லாம் என் அடியாட்கள் என்றும் அவர்களை வைத்து என் அப்பாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும் நான் அந்த வீட்டில் இருந்த வெள்ளி பொருட்களை எல்லாம் திருடிக்கொண்டு வந்துவிட்டேன் என்று போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிந்து இருக்கிறார்கள். இது அவர் மட்டும் தனித்து எடுத்து முடிவுகள் கிடையாது. இதன் பின்னால் ஹரி, அருண் என்று என் குடும்ப நபர்கள்தான் இருக்கிறார்கள். அதுமட்டும் இல்லாமல் எனக்கும் ஹரிக்கும் எப்போதும் ஒத்துவராது. காரணம், அவர் மட்டும்தான் பெரிய இயக்குனர் என்று அவர் மனதில் நினைப்பு. ஆனால், இப்போது அவருக்கும் மார்க்கெட் இல்லை. அருணும் இப்போதுவரை ஒரு முயற்சியில்தான் இருக்கிறார். இந்த சமயத்தில் நான் தனியாக ஒரு படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்து இருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. எளிமையாக சொல்லவேண்டும் என்றால் எங்கள் வீட்டு ஆண்களுக்கு பெண்களை ஊக்குவிக்கும் தன்மையே கிடையாது". 

 

 

Next Story

ரத்னம் பட ப்ரமோஷன்; வீதி வீதியாக சென்று ஆதரவு கோரும் இயக்குநர் ஹரி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

நடிகர் விஷால் நடித்துள்ள ரத்னம் திரைப்படம் நாளை வெள்ளிக்கிழமை வெளியாக உள்ளது. இதயொட்டி அப்படத்தின் இயக்குநர் ஹரி இன்று வேலூர் விருதம்பட்டில் உள்ள திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தார் அப்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.

முன்னதாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வேலூர் எனக்கு சென்டிமென்ட்டான ஊர் இங்கிருந்து தான் திரைக்கதைகளை எழுதுவேன். எனக்கும் வேலூருக்குமான நெருக்கம் அதிகமாக உள்ளது. ரத்தினம் என்னுடைய 17 வது படம் நடிகர் விஷாலை வைத்து இயக்கும் மூன்றாவது படமாகும் இப்படம் வெற்றி பெறும். வழக்கமாக எனது படம் பல மாவட்டங்களை சார்ந்திருக்கும். வட மாவட்டங்களை மையகப்படுத்தி படம் ஒன்று இயக்க திட்டமிட்டேன்.

அதன்படி ஆந்திரா - தமிழக மாவட்ட எல்லையான வேலூர் மாவட்டத்தில் இப்படத்தை இயக்கி உள்ளேன். மாநில எல்லைகளின் பிரச்சினை இந்த படத்தில் காட்டி இருப்பேன். இளைஞர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் குடும்பப் பாங்காகவும் அமைந்துள்ளது. பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி அளிக்கிறது. பழைய படத்திற்கு ஆதரவு அளிக்கும் போது எங்களை மென்மேலும் ஊக்குவிக்கிறது. மீண்டும் நாங்கள் தரமான படங்கள் இயக்குவதற்காக எங்களை பணி செய்ய வைக்கிறீர்கள்” என்றார்.

Director Hari goes from street to meet people for the promotion of Rathnam movie

ரத்னம் ட்ரெய்லரில் கெட்ட வார்த்தை இடம் பெற்றிருப்பது குறித்து கேட்டதற்கு, “படத்துக்கு தேவை என்பதால் மட்டுமே சில கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகிறது. இது படத்தின் தேவையை கருதியே பயன்படுத்துகிறோம். மேலும் பொது மக்களுக்கு மிக நெருக்கமாக ரியாலிட்டியுடன் எடுக்க வேண்டும் என்பதால் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறோம். எனது கடந்த படமான யானை படத்துக்கு இங்கு வந்திருந்தேன். படம் வெற்றி பெற்றது இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும். ரத்தினம் படம் தமிழகத்தில் 750 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக நடிகர்கள் சினிமாக்கு வருவது சந்தோசம் தான்.

என்னுடைய படங்களில் குடும்ப செண்டிமெண்ட் கட்டாயமாக இருக்கும். இதுவே நமது கலாச்சாரமாக எண்ணி அனைத்து படத்திலும் அதை வலுவாக வைத்துள்ளேன். கில்லி படம் ரீ ரிலீஸ் ஆகி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதை பார்க்கும்போது எனக்கும் ஆசையாக உள்ளது எனது படத்தையும் ரீலீஸ் செய்ய வேண்டும் என்று இதற்கு தயாரிப்பாளர் முடிவு செய்ய வேண்டும். மீண்டும் போலீஸ் கதையாம்சம் கொண்ட படத்தை இயக்க திட்டம் வைத்துள்ளேன்” என்றார்.

லோகேஷ் யுனிவர்ஸ் போன்று ஹரி யுனிவர்ஸ் வர வாய்ப்புள்ளதா என கேட்டதற்கு, “அது அவருடைய ஸ்டைல். எனக்கு அதுபோன்ற எண்ணம் இல்லை” என்று பதிலளித்தார்.

வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரமோஷன் தேடுவது குறித்து கேட்டதற்கு, “தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று மக்களை சந்திக்கிறார்களே அதுபோலத்தான் நாங்களும் ஒரு படைப்பை உருவாக்கி அதனை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல இது போன்ற பிரமோஷனை நாடுகிறோம்” என்றார்.

Next Story

நடிகை வனிதா மீது கொலைவெறி தாக்குதல்; மீண்டும் கோரிக்கை வைத்த வனிதா

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

nn

 

பிரபல நடிகை வனிதாவை மர்ம நபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 

பிக்பாஸ் 7 விமர்சனம் குறித்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பிரபல நடிகை வனிதா காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காரில் இருந்து இறங்கி சகோதரி சௌமியா வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது  'ரெட்கார்டா  கொடுக்குறீங்க... இதற்கு நீ வேற சப்போர்ட் வேற பண்றியா'' எனக்கேட்டு மர்ம நபர் ஒருவர் அவருடைய முகத்தில் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இருட்டான அந்த இடத்தில் எங்கிருந்தோ ஒருவர் வந்து தன்னை தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் தன்னுடைய காயமடைந்த முகத்துடன் பதிவு ஒன்றை வனிதா வெளியிட்டுள்ளார். நடிகை வனிதா கொடூரமாக தாக்கப்பட்டது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமக்கு உடனடியாக உதவி செய்த காவல்துறைக்கு நன்றி தெரிவிப்பதாகவும், உடல்நலம் பெறும் வரை தம்மை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் வனிதா எக்ஸ் வலைதளத்தில் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.