கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வருகை தந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவரோடு நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு மேடையில் பேசிய யோகி பாபு, "நானும் நடராஜனும் காரில் வந்தபோது அவர் வளர்ந்த இடத்தை காண்பித்தார். அந்த வீட்டில் 8 பேர் தூங்குவோம் என சொன்னார். அந்த இடத்தில ஒரு சின்ன 2 பைக் கூட நிறுத்த முடியாது. அது மாதிரியான இடத்தில வாழ்ந்திருக்கிறார். அவர் எப்பவுமே பழசை மறக்கமாட்டார். ஏனென்றால் அவ்வளவு அடி மட்டத்தில் இருந்து வந்தவர்.
இன்றைக்கு இவ்ளோ பெரிய விஷயத்தை பண்ணியிருக்கார். இன்டர்நேஷனல் லெவலில் போயிருக்கார். அவரை முழுக்கமுழுக்க இந்த ஊரும் மக்களும் சப்போர்ட் பண்ணனும். நாம எதிர்பார்ப்பதை விட 10 மடங்கு அவர் வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எல்லாருமே ஜெயிக்கணும். நான் அடிக்கடி சொல்வது தான். யாரு கிட்ட திறமை இருக்குதோ வாங்க. மற்றவர்களை பற்றி யோசிக்காதீங்க. வாழ்க்கையில் ஜெயிச்சிடலாம்" என்றார்.