Skip to main content

'அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து....' மீடூ குறித்து விஷால் 

Published on 15/10/2018 | Edited on 15/10/2018
vishal

 

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் உருவாகியுள்ள 'சண்டக்கோழி' 2 படம் வரும் விஜயதசமியை முன்னிட்டு 18ஆம் தேதி வெளியாகவுள்ளது. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் வில்லியாக நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது அதில் பேசிய விஷால் மீடூ குறித்து பேசியபோது.... "நான் எப்போதும் பாலியல் சீண்டல்களுக்கு எதிரானவன். #METOO வுக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்து கூற வேண்டும் என்று இல்லை. ட்விட்டர் என்பது ஒரு தொழிநுட்ப வளர்ச்சி. அது மற்றும்மொரு சமூகவலைதளம். அங்கு தான் கருத்து கூறவேண்டும் என்று இல்லை. பத்திரிகையாளர்களை சந்தித்து என்னுடைய கருத்துக்களை கூறலாம் என்று இருந்தேன். பாலியல் தொல்லைகள் நடப்பதற்கு முன்பே அமலா பால் புகார் செய்தது போல் எங்களிடம் புகார் செய்ய வேண்டும்.

 

 

 

மலேசியாவில் ஒரு நடன நிகழ்ச்சியின் ஒத்திகை நடக்கும் போது அமலா பாலிடம் தவறாக பேசிய ஒருவரை பிடித்து வைத்து பின்னர் என்னை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசினார். நானும், கார்த்தியும் உடனே அவரை கைது செய்ய இங்கிருந்தே எல்லா ஏற்பாடுகளையும் செய்தோம். அதே போல் இதை போன்ற விஷயங்கள் நடப்பதற்கு முன்னரே எங்களை தொடர்பு கொண்டால் உடனடியாக நாங்கள் நடவடிக்கை எடுப்போம். பிரச்சனை நடந்துவிட்டது என்று புகாரளிக்க இது ஒன்னும் காவல் நிலையம் அல்ல. பாலியல் புகார்களை விசாரிக்க மற்றும் அதை தடுக்க தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்