Skip to main content

பாட்டுக்கான ராயல்டி தொகையில் ஒரு பகுதி தருகிறார் இளையராஜா - விஷால் அறிவிப்பு 

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
vishal

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் 'இளையராஜா 75' நிகழ்ச்சியின் டிக்கெட் திறப்பு விழா மகேந்திரா வோர்ல்டு சிட்டியில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசுகையில்... "இந்நிகழ்ச்சி மூலம் இளையராஜாவை பெருமைப்படுத்துவதைத் தாண்டி, அவரால் வரும் நிதியைக் கொண்டு தமிழ் திரைப்பட சங்க உறுப்பினர்களின் நலனுக்கு பயன்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறோம். அதேபோல், அவருக்கு வரும் ராயல்டி தொகையில் ஒரு பகுதியை இசை சங்க அறக்கட்டளைக்கும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க அறக்கட்டளைக்கும் வழங்குவதாகத் தெரிவித்திருக்கிறார். அதற்கான 'MO' -வில் கையெழுத்திடவிருக்கிறோம். விரைவில் அதுசார்ந்த செய்திகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம்.

 

 

விழாவிற்கு மற்ற இசையமைப்பாளர்களும் வரவிருக்கிறார்கள். அதேபோல், அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறோம். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இருவரையும் நேரில் சென்று அழைப்போம். அவர்களும் வருவார்கள் என்று நம்புகிறோம். ரஜினி, கமல் இருவருக்கும் விண்ணப்பம் வைத்திருக்கிறோம். பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகள் திரைப்பட துறையில் இருக்கும் அனைத்து அமைப்புகளுக்கும் உள்ளூர், வெளியூர் படப்பிடிப்பிற்கு விடுமுறை அறிவித்திருக்கிறோம். யாரெல்லாம் கலந்துகொள்வார்கள் என்பதை பற்றி விபரம் ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். இந்நிகழ்ச்சி பிப்ரவரி 2ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி இரவு 10 மணிக்கு முடிவடையும். இரண்டு நாட்களும் இதே நேரம் தான் இருக்கும். இதற்கான டிக்கெட் தொகைக்கான ஒப்பந்தம் பற்றி 'bookmyshow' - வுடன் பேசிக்கொண்டிருக்கிறோம். ரூ.500 லிருந்து ரூ.25000 ஆயிரம் வரை கட்டணமாக வசூலிக்கப்படும். இரண்டு நாட்களுக்கு சீசன் பாஸ்-ம் இருக்கிறது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்