இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் மறைந்த தினம் இன்று (27.7.2023). இந்தியாவின் முதல் குடிமகனாக, ஜனாதிபதியாக உழைப்பால் உயர்ந்த அவரை இன்று அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் கமல், "வான் அறிவியலிலும் வாழ்வியல் நெறிகளிலும் சிறந்து விளங்கிய மாமனிதர்" எனக் குறிப்பிட்டு ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் விஷால், "ஏபிஜே அப்துல்கலாம் அய்யா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் மரக்கன்றுகளை நட்டேன். விஜய் வர்மா என்ற இளைஞன், விவசாயிகளுக்கு உதவும் வகையில், விலங்குகள் வயல்களுக்குள் நுழைவதைத் தவிர்க்கவும் அங்குள்ள பயிர்களை உண்ணாமல் இருக்கவும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளான். அதனை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சியடைகிறேன்.
வளர்ந்து வரும் திறமையாளர்கள் எம்.என்.சி (MNC) களுக்காக அல்லாமல் விவசாயிகளுக்காக ஏதாவது செய்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய முயற்சியையும் யோசனையையும் பாராட்டுங்கள். விவசாயிகளை இளைஞர்கள் அங்கீகரிப்பது நமது சமூகத்திற்கு மிகவும் அவசியம். தலை வணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
On behalf of #APJAbdulKalam Ayya’s remembrance anniversary we planted saplings in Annai Velankanni College and also felt elated and happy to introduce a device invented by a young boy, Vijay Varma which is usable for Farmers to evade animals eating the crops and entering their… pic.twitter.com/l192hWCUk5— Vishal (@VishalKOfficial) July 27, 2023