Skip to main content

“இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன்”- நடிகர் விக்ராந்த்

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பில் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் சுட்டுப்பிடிக்க உத்தரவு படம் குறித்து விக்ராந்த் கூறியது, "வெளிப்படையாக சொல்வதென்றால், நான் முதலில் இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பவில்லை. இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா என்னிடம் இது ஒரு மல்ட்டி ஸ்டாரர் படம் என தெரிவித்த போது, என் முந்தைய படங்களும் அதே வகையில் இருந்ததால் இதை தவிர்க்க விரும்பினேன். மேலும், 'பக்ரீத்' போன்ற திரைப்படங்கள் என்னை ஒரு சோலோ ஹீரோவாக நிறுவும் நேரத்தில், இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள நான் தயங்கினேன். எனினும், ராம்பிரகாஷ் ராயப்பா குறைந்தது படத்தின் ஸ்கிரிப்ட்டையாவது கேளுங்கள் என கோரிக்கை வைத்தபோது, கதையை கேட்க முடிவு செய்தேன். கதை சொல்ல ஆரம்பித்த 10 நிமிடங்களில் கதை சொன்ன விதம் மற்றும் என் கதாபாத்திரத்தை அவர் வடிவமைத்திருந்த விதத்தை பார்த்து நான் வியப்படைந்தேன். கதையை கேட்ட பிறகு தவிர்க்கவே முடியாமல் ஒப்புக் கொண்டேன்" என்றார்.
 

vikranth

 

 

அவர் மேலும் கூறும்போது, "என் கதாபாத்திரம் எமோஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆக்‌ஷன் என அனைத்தையும் கொண்டிருக்கும். வழக்கமாக, திரில்லர் திரைப்படங்கள் என்பது அனைவரையும் அடுத்து என்ன என யூகிக்க வைக்கும் ஒரு சூத்திரத்தையே கொண்டிருக்கும். அதற்கு மாறாக, சுட்டு பிடிக்க உத்தரவு நேரடியான கதை சொல்லலை கொண்டிருக்கும், ஆனாலும் கதை முழுவதுமே த்ரில்லர் கூறுகள் தக்க வைக்கப்படும். 
 

உண்மையில் உயரத்தை பார்த்தால் மயக்கம் வரும் என்னை போன்ற ஒரு நடிகரை வைத்து இந்த காட்சிகளை படம் பிடித்தது சவாலான விஷயம். படத்தின் பெரும்பகுதி சண்டைக்காட்சிகள் மிக உயரமான கட்டிடங்களின் உச்சியில் படமாக்கப்பட்டவை, அதை செய்து முடிப்பது கடினமாக இருந்தது" 
 

விக்ராந்த், அதுல்யா ரவி, மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி.கே.ராம் மோகன் தயாரிக்க, ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கியிருக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்