Skip to main content

ரஜினிக்கு வில்லனாகும் விக்ரம்

Published on 17/05/2023 | Edited on 17/05/2023

 

vikram to play villan role in thalaivar 170 movie

 

ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாளம் மற்றும் கன்னடத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் சிவராஜ் குமார், மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில், இந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதையடுத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா தயாரிக்கும் இப்படம் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகிறது. அண்மையில் இப்படத்தின் ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இப்படத்தைத் தொடர்ந்து தனது 170வது படமாக 'ஜெய் பீம்' பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி. லைகா தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகவுள்ளது. இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாவதாகவும் போலீஸ் கதாபாத்திரத்தில் ரஜினி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் படக்குழு இதனை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘முடிச்சிடலாம்...’ - வெளியான ‘ரஜினி 171’ பட அப்டேட்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
thalaivar 171 titled as coolie

ரஜினிகாந்த் தற்போது தனது 170ஆவது படமான ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிக்கும் இப்படத்தை ஜெய் பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இப்படத்தைத் தொடர்ந்து 171ஆவது படத்திற்காக லோகேஷ் கனகராஜுடன் கை கோர்த்துள்ளார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்களாக அன்பரிவ் இணைந்துள்ளனர். இப்படத்தின் கதை எழுதும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தில் ராகாவா லாரன்ஸ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. பின்பு பாலிவுட் முன்னணி நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இதில் ரன்வீர் சிங் நடிப்பது உறுதியாகிவிட்டதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இப்படத்தில் ஷோபனா நடிக்கவுள்ளதாகவும், அவரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து ஸ்ருதிஹாசன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசரில், தங்கம் கடத்தும் குடோனுக்குள், ரஜினி செல்கிறார். அங்கு அந்தக் கும்பலை அடித்துபோடுவது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. சண்டை காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் ரஜினி, வசனம் பேசிக்கொண்டே அக்கும்பலை தாக்குகிறார். “அப்பாவும் தாத்தாவும், வந்தார்கள் போனார்கள். தப்பென்ன, சரியென்ன, எப்போதும் விளையாடு. அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே. எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே,... சோறுண்டு, சுகமுண்டு, மதுவுண்டு, மாதுண்டு, மனமுண்டு என்றாலே, சொர்கத்தில் இடமுண்டு” என்று அவர் ஏற்கெனவே அவர் படத்தில் பேசும் வசனம் இடம்பெறுகிறது.

மேலும் இறுதியில் ‘முடிச்சிடலாம் மா...’ ரஜினி சிரித்து கொண்டே பேசும் வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் தங்க கடத்தலை வைத்து உருவாகுவது போல் தெரியும் சூழலில் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.