Skip to main content

காதல்.. வீரம்.. அரசியல்.. வைரமுத்துவின் 'பொன்னி நதி' கவிதை

Published on 03/09/2022 | Edited on 03/09/2022

 

vairamuthu talk about cauvery

 

சோழ மண்டலத்திற்கு நீர் ஆதாரமாக இருக்கும் காவிரியின் சிறப்பை பறைசாற்றும் வகையில் வெளியான பொன்னி நதி பாடல்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

 

கர்நாடக மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்து, பெருக்கெடுத்து ஓடும் காவிரியை காண காவிரி பலத்திற்கு சென்றுள்ளார். அங்கு தலைவிரித்து ஓடும் காவிரியை கண்டு கவிஞர் வைரமுத்து  அதன் சிறப்பினை கவிதை வடிவில் கூறியுள்ளார். அதில் 

 

“பாய்ந்தோடும் காவிரியே 

எங்கள் பரம்பரையின் தாய்ப்பாலே, 

வரலாற்றின் ரத்தமே 

எங்கள் வயல்களின் திரவச் சாப்பாடே 

பல்லாண்டு தாண்டி 

நீ பெருக்கெடுத்து ஓடுவதாக கேள்விப்பட்டு 

கிறுக்கெடுத்து ஓடி வந்தேன்

கரிகாலன் கால் நனைத்தது நீதான்.. என்று தொடங்கும் இந்த கவிதையில் காவிரியின் சிறப்பினை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறார் கவிஞர் வைரமுத்து. மேலும், காவிரியில் கலந்துள்ள காதல், வீரம், அரசியல் என அனைத்தையும் பாடியுள்ளார். 

 

இந்தக் கவிதையில் கவிஞர் வைரமுத்து;

“ராஜராஜனின் வாள்முனையை 

உழவனின் ஏர்முனையை தீட்டி தந்தவள் நீதான்,

கரைதொட்டு பாய்ந்தோடும் காவேரியே உன் அழகில் 

பறைகொட்டி, பறைகொட்டி பாவி மனம் கூத்தாடும் 

உடலோடு சேர்ந்தோடும் உயிர் உதிரம் நீ தாயே 

கடலோடு சேராமல் கழனிகளில் சேர்வாயே 

மலைத் தலைய கடற்காவேரியென  

கடியலூர் உருத்திர கண்ணன் முதல் 

காவிரி தாயே காவிரி தாயே...

காதலர் விளையாட பூ விரித்தாயேயென 

கண்ணதாசன் வரை ஈராயிரம் ஆண்டுகளாய் 

நுராயிரம் புலவருக்கு பாடுபொருளாகிய பால்நதியே 

நீ யாரோ எமக்கிட்ட பிச்சையல்ல

எங்கள் உரிமை 

நீ அரசியலின் ஆசிர்வாதமல்ல எங்கள் அதிகாரம் 

உன் கால்களை துண்டிக்க அனுமதிக்க மாட்டோம், அணைகட்ட விடமாட்டோம்" என கூறி முடிக்கிறார். 

 

 

 

சார்ந்த செய்திகள்