Skip to main content

வெளியானது வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக்!

Published on 16/07/2021 | Edited on 16/07/2021

 

suriya

 

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள படம் வாடிவாசல். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

நடிகர் சூர்யா, தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் 'சூர்யா 40' படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் நடிகர் சூரியை வைத்து 'விடுதலை' என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படங்கள் நிறைவுபெற்ற பின் இருவரும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரானது இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்