Skip to main content

மாநாடு படத்தை தொடர்ந்து சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் சுரேஷ் காமாட்சி

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

suresh kamatchi presents jivi2 film

 

கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்தது சிவி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.  இப்படத்தில் யோகி மற்றும் தேஜா சரண்ராஜ் இருவரும் கதாநாயகனாக நடிக்கின்றனர். எஸ் ஜே சூர்யா வின் வியாபாரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமாகி பின்னர் 'குக்கூ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சுவாதிஷா, சந்தோஷ், கிறிஸ்டின், தாடி பாலாஜி, சாம்ஸ், கோதண்டம், காயத்ரி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மலையாள நடிகர் நிவின் பாலி வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் வெளியிட்டு உரிமையை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் மாநாடு படத்தை தொடர்ந்து சுரேஷ் காமாட்சி ஜிவி 2 படத்தை வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்