Skip to main content

மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பிய ஸ்டண்ட் சில்வா

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
stunt silva next directorial movie update

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர். நடிப்பில் ஆக்‌ஷனில் நல்ல வரவேற்பை பெற்ற 'எமதொங்கா' படம் மூலம் ஸ்டண்ட் இயக்குநராக அறிமுகமானவர் ஸ்டண்ட் சில்வா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட என பல மொழிகளில் 300 படங்களுக்கு மேலாக சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். இவர் சண்டை பயிற்சி அளிப்பது மட்டுமின்றி பல படங்களில் நடித்தும் உள்ளார். 

இவர்  தமிழில் இயக்கிய முதல் திரைப்படம்  ‘சித்திரை செவ்வானம்’ சமுத்திரக்கனி மற்றும் பிரபல நடிகை சாய் பல்லவியின்  தங்கை பூஜா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. சித்திரை செவ்வானம் படத்தை இயக்கிய பிறகு  ஏற்கனவே ஒப்புக்கொண்ட  பல  படங்களின் ஸ்டண்ட் இயக்குநர் பணி இருந்ததால் உடனே  படங்கள் இயக்க முடியவில்லை.

இந்த 2024 ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமான முறையில் அதிரடி ஆக்க்ஷன் நிறைந்த திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து கடந்த பொங்கலுக்கு வெளியான மிஷன் படம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்