Skip to main content

கணவர் எப்படி இறந்தார் என்பதை உருக்கமுடன் வீடியோ வெளியிட்டுச் சொன்ன சின்னத்திரை நடிகை

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

sruthi shanmuga priya about his husband passed away

 

தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. கடந்த ஆண்டு அரவிந்த் சேகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஒரு ஆண்டு கடந்து இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் நேற்று (03.08.2023) திடீரென்று அவரது கணவர் மரணமடைந்தார். அவருக்கு வயது 30. இந்த வயதில் மறைந்துள்ளதால் இவரது மரணம் குறித்துப் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வந்தன. இவர் மிஸ்டர் தமிழ்நாடு 2022 பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், கணவர் மரணம் குறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா. அதில், "அரவிந்த்தோட இறப்புக்கு நிறைய பேர் ஃபோன் பண்ணி மெசேஜ் பண்ணி நிறைய சப்போர்ட் கொடுத்தீங்க. முதலில் அதற்கு நன்றி. என் கூடவே இருக்காரு... எப்பவுமே என்னை விட்டு போகமாட்டார். அதையெல்லாம் தாண்டி, இந்த கஷ்டமான நேரத்தில் கூட வீட்டில் இருக்கிற மற்ற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு இப்ப வீடியோ வெளியிடுவதற்கான முக்கிய காரணம், யூட்யூப் சேனல்ஸ் தான். நிறைய சேனல்கள் என்ன நடக்கிறது என தெரியாமல் தேவையில்லாத விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள். உங்களுக்கு அப்படி தகவல்கள் தேவைப்பட்டால் நான் இப்போ பேசுறதை ஆதாரமாக எடுத்துக்கொள்ளுங்கள். 

 

தெரியாத விஷயங்கள் அது, இது என பரப்பி... அதனால் என் குடும்ப உறுப்பினர்கள் பயங்கர வருத்தமடைகிறார்கள். இதை எல்லா யூட்யூப் சேனல்ஸ்களுக்கும் நியூஸ் சேனல்ஸ்களுக்கும் கேட்டுக்கொள்கிறேன். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார். அதை தாண்டி நாங்கள் வந்து கொண்டிருக்கிறோம். அதை தாண்டி அவர் ஒரு பாடி பில்டர், ட்ரையினர், ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும்போது இறந்துவிட்டார் என தவறான தகவல்களை சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் கிடையாது. அவர் ஒரு சிவில் இன்ஜினியர். உடல் ஃபிட்னஸில் அவருக்கு ஆர்வம் அதிகம் அவ்வளவுதான். அதைத் தாண்டி எதுவும் இல்லை. அதனால் தவறான தகவ்களை பரப்ப வேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஈசிஆரில் நடந்த பரபரப்பு சம்பவம்; வீடியோ வெளியிட்ட நடிகை

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ethir neechal serial actress madhumitha about ecr accident issue

தனியார் தொலைக்காட்சியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21 ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். பின்பு திரும்பி வந்தபோது காரை மதுமிதா ஓட்டி வந்தார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்தது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்தார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்தார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்தனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்தனர். இந்த சம்பவத்தின் போது மது போதையில் மதுமிதா காரை ஓட்டியுள்ளதாகக் கூறப்பட்டது. 

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மதுமிதா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “எல்லா டிவி சேனல்கள், ஆர்டிகல், யூட்யூபில் ஒரு தவறான செய்தி பரவி வருகிறது. அதாவது, நான் மது அருந்துவிட்டு ஒரு போலீஸ்காரரை இடிச்சிருக்கேன், அந்த போலீஸ்காரர் தீவிரமாக காயம்பட்டிருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கு. முதலில் அது உண்மை இல்லை. நான் குடிக்கவில்லை. ஆனால் சின்ன விபத்து நடந்தது. அதில் அந்த போலீஸ்காரர் இப்போ நல்லாத்தான் இருக்காங்க. நானும் நல்லாதான் இருக்கேன்” என்று விளக்கமளித்துள்ளார். 

Next Story

எதிர்நீச்சல் சீரியல் நடிகை மீது வழக்கு

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
ethir neechal actress madhumitha car accident issue

தனியார் தொலைக்காட்சியில் பிரபல சீரியலாக இருக்கும் எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த இவர், கடந்த 21ஆம் தேதி அவரது ஆண் நண்பரின் காரில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளார். பின்பு திரும்பி வந்த போது காரை மதுமிதா ஓட்டி வந்துள்ளார். அப்போது ஒரு இடத்தில் மெட்ரோ ரயில் பணி நடப்பதால் சாலை மூடப்பட்டு இருந்துள்ளது.

அதனால் வாகனத்தை திருப்பி ஒன்வே ரூட்டில் ஓட்டி வந்துள்ளார். அதே சாலையில் காவலர் ரவிகுமார், இருசக்கர வாகனத்தில் காருக்கு எதிர்ப்புறமாக வந்துள்ளார். மதுமிதா ஓட்டி வந்த கார் ரவிகுமார் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ரவிகுமாருக்கு வலது கால் தொடையிலும், இடது கை முட்டியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், ரவிகுமாரை சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். 

பின்பு பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர், மதுமிதா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காரை பறிமுதல் செய்துள்ளனர். பின்பு ஆர்டிஓ சோதனைக்குப் பின் காரை ஒப்படைத்துள்ளனர். அடுத்து சில மணி நேர விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய பிணையில் மதுமிதாவை விடுவித்துள்ளனர்.