Skip to main content

"மருத்துவர்களும், நாங்களும் நம்பிக்கையாக இருக்கிறோம்" - எஸ்.பி.சரண் விளக்கம்!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
geag

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உடல் நிலை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்தது. 

 

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இதையடுத்து திரைத்துறையினர் பலரும் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அறிக்கைகள் வெளியிட்டு வரும் நிலையில் தற்போது எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் மீண்டும் வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில்.... 

 

"அனைவருக்கும் வணக்கம், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உங்களுடன் பகிர விரும்புகிறேன். பல கேள்விகள் உங்களுக்கு இருக்கும், பலர் என்ன அழைத்துப் பேசி வருகின்றனர். அப்பா நன்றாகத் தேறி வருகிறார். நேற்று செயற்கை சுவாசக் கருவி பொருத்தியிருந்தார்கள். அது அவருக்கு உதவி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மீள்வதற்கான அறிகுறிகளை அப்பா காட்டி வருகிறார். மருத்துவர்களும், நாங்களும் நம்பிக்கையாக இருக்கிறோம். நேற்றை விட நுரையீரல் நன்றாக இயங்குகிறது. இன்னும் சில காலத்தில், இன்றோ நாளையோ அல்ல, ஆனால் விரைவில் அப்பா இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்டு விடுவார். சீக்கிரமாகக் குணமடைவார். அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து தகவல்களை நான் பகிர்கிறேன். அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் நன்றி. அதைத் தொடருங்கள்" என கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்