Skip to main content

திருட்டுத்தனமாக வெளியான 'சூரரைப் போற்று' -நீக்கும் முயற்சியில் படக்குழு...

Published on 12/11/2020 | Edited on 12/11/2020
suriya

 

 

நடிகர் சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான படம் 'சூரரைப் போற்று'. இப்படம் அமேசான் பிரைமில் நேற்று வெளியானது. இந்தியாவை தவிர ஒரு சில நாடுகளில் சற்று முன்பாகவும், இந்தியாவில் 10 மணி அளவிலும் இப்படம் வெளியானது.

 

அமேசான் பிரைமில், இப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே, வேறு சில இணையதளங்களிலும் திருட்டுத்தனமாக  வெளியானது. அதே போல் யூடியூபிலும் இப்படம் வெளியானது இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

 

இதனையடுத்து, படக்குழு மற்றும் அமேசான் பிரைம் அளித்த புகாரையடுத்து, 'சூரரைப் போற்று' படம் யூடியூபிலிருந்து நீக்கப்பட்டது. மேலும் சைபர் கிரைம் மூலமாக மற்ற இணையதளங்களில் இருந்தும் நீக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்