Skip to main content

மூன்று முறை கதை விவாதம்... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் சிம்பு, சுதா கொங்கரா கூட்டணி?

Published on 30/12/2021 | Edited on 31/12/2021

 

silambarasan joining director sudha kongara next movie

 

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.  இப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கோகுல் இயக்கும் 'கொரோனா குமார்' படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார். 

 

ad

 

இந்நிலையில் சிம்பு நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குநர் சுதா கொங்கரா இயக்கம் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச்சுற்று, சூரரை போற்று ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. மேலும் இந்த படங்களுக்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், பாராட்டுகளும் சுதா கொங்கராவை முன்னணி இயக்குநர் அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ள நிலையில் அடுத்ததாக சிம்புவுடன் இணையவுள்ளார். இதற்காக இரண்டு முறை  நடிகர் சிம்வு, சுதா கொங்கராவுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட நிலையில், சமீபத்தில் மூன்றாவது முறையும் கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்