பா.ம.க. தலைவர் அன்புமணியின் இரண்டாவது மகள் சங்கமித்ரா, டிஜி ஃபிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து ‘அலங்கு’ என்ற படத்தை தயாரித்துள்ளார். எஸ்.பி. சக்திவேல் இயக்கியுள்ள இப்படத்தில் குணாநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 27ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இப்படம் ஒரு நாயிக்கும் மனிதருக்கும் இடையிலான உறவை தமிழக - கேரள எல்லைப்பகுதியில் இருக்கும் புலம்பெயர்ந்த பழங்குடியினரின் பின்னணியில் சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கேற்ப ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. பின்பு வெளியான ‘காளியம்மா’, ‘கொங்கு சாங்’ஆகிய பாடல்களும் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் படமாக்கப்பட்டதாக அமைந்திருந்தது. இப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடப்போவதாகப் படக்குழு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அலங்கு படக்குழு நடிகர் ரஜிகாந்த்தை சந்தித்துள்ளது. இது தொடர்பாக படக்குழு எக்ஸ் சமூகவலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. மேலும் அந்த பதில் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.