Skip to main content

‘ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்...’- நட்பை விவரிக்கும் ‘சலார்’

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
salaar first single released

கே.ஜி.எஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'சலார்'. இப்படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க, பிரித்திவிராஜ் வில்லனாக நடிக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.  

பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாகத் தெலுங்கு, இந்தி, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் டிசம்பர் 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. அதைப் பார்க்கையில் பிரசாந்த் நீலின் வழக்கமான ஆக்‌ஷன் காட்சிகளும், பவர்ஃபுல்லான வசனங்களும் இடம்பெற்றிருந்தன. மேலும் நட்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து கதை அமைத்துள்ளனர். 

இதையடுத்து இப்படத்தில் யஷ் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இளம் பாடகி தீர்த்தா ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். ஆனால் அது தவறுதலாக சொல்லிவிட்டதாக பின்பு சமூக வலைத்தளம் வாயிலாகத் தெரிவித்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரின் கதாபாத்திரத்திற்கும் இருக்கும் நட்பை விவரிக்கும் விதமாக இப்படம் அமைந்துள்ளது. ஐரா உடுப்பி பாட மதுரகவி வரிகள் எழுதியுள்ளார். பாடலில் ‘ஆனை ஒருத்தன் சேனை ஒருத்தன்... இணைஞ்சு வலம் வரும் கலகமே... இழுக்கும் மூச்சிலும் இருவர் பேச்சிலும் நட்பு வாசமே...’, ‘ஒருத்தன் அசுரன் ஒருத்தன் அரசன்... கருத்தில் ஒத்தவரே...’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது.   
 

சார்ந்த செய்திகள்

Next Story

குறுகிய நாட்களில் சாதனை படைத்த ஆடுஜீவிதம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
prithviraj blessy aadujeevitham box office collection

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த  நாவல் ‘ஆடு ஜீவிதம்’. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி நிறைந்த வாழ்க்கை மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து கேரளா திரும்பினார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இந்த நாவலை தழுவி ‘ஆடு ஜீவிதம்’ என்ற அதே தலைப்பில் மலையாள இயக்குநர் பிளெஸ்ஸி, பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலரை வைத்து படம் இயக்கியுள்ளார். இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி வெளியானது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். 

முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அதை தொடர்ந்து படம் வெளியான பிறகு மாதவன், யோகி பாபு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வருகிறது. முதல் 4 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

prithviraj blessy aadujeevitham box office collection

இந்த நிலையில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குறுகிய நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த மலையாள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது. இதுவரை மலையாளத்தில் பிரேமலு -ரூ.135 கோடி, லூசிஃபர் - ரூ.127 கோடி, புலிமுருகன் - ரூ.152 கோடி, 2018 - ரூ.175 கோடி, மஞ்சும்மல் பாய்ஸ் - ரூ.222 கோடி ஆகிய படங்கள் அதிகம் வசூலித்த படங்களாக டாப் 5 இடத்தில் இருக்கிறது. இதில் ஆடுஜீவிதம் போலவே பிரேமலு மற்றும் மஞ்சும்மல் பாய்ஸ் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஆடுஜீவிதம் படத்தை தவிர்த்து அனைத்து படங்களும் மலையாளத்தில் மட்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Next Story

“மஞ்சும்மெல் பாய்ஸ் போல அல்ல... சல்யூட் சார்” - யோகி பாபு புகழாரம்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
yogi babu appreciate prithviraj aadujeevitham

மலையாள இலக்கியத்தில் மிகவும் பிரபலமான மற்றும் விற்பனையில் சாதனை படைத்த ‘ஆடு ஜீவிதம்’ நாவல் அதே தலைப்பில் மலையாளத்தில் படமாக்கப்பட்டுள்ளது. கேரளத்திலிருந்து குடும்ப வறுமையை தீர்ப்பதற்காக அரேபிய தேசத்திற்கு செல்லும் நஜீப் என்ற நபர், அங்கு ஒருவரால் கடத்தப்பட்டு பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் தொழிலுக்கு தள்ளப்படுகிறார். அங்கு அவர் சந்திக்கும் அனுபவங்கள், வலி மற்றும் அதிலிருந்து அவர் எப்படி தப்பித்து இந்தியா வந்தார் என்பதை விரிவாக இந்த நாவல் எடுத்துரைக்கிறது.

இப்படத்தை பிளெஸ்ஸி இயக்க பிருத்விராஜ், அமலாபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படம் 10 வருடங்கள் கதை உருவாக்கத்திலிருந்து 6 வருடங்கள் படப்பிடிப்பிலிருந்து மொத்தம் 16 வருடங்கள் கழித்து இப்படம் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக பிரித்விராஜ் தனது உடல் எடையை கூட்டியும் குறைத்தும் நடித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகியுள்ளது.

சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக பிரித்விராஜின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். முன்னதாகவே இப்படத்தின் சிறப்பு காட்சியின் போது, கமல்ஹாசன், மணிரத்னம், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். அந்த வகையில் தற்போது, யோகி பாபு இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

yogi babu appreciate prithviraj aadujeevitham

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “இன்னும் படத்தின் தாக்கத்திலிருந்து வெளிவரமுடியவில்லை. அந்த வலி நிறைந்த பயணம். இப்படம் சினிமா பிரியர்களுக்கு விருந்து. இது மஞ்சும்மெல் பாய்ஸ் போல சீட் நுணியில் பார்க்கும் சர்வைவல் த்ரில்லர் அல்ல. இது ஒரு எமோஷனல் சர்வைவல் டிராமா. அதனால் அதற்கு தகுந்த வேகத்தில் நகரும். பிரித்விராஜ் சார் இந்த படத்தின் உயிர். மம்மூட்டி, மோகன்லால் நடிகர்களுக்கு பிறகு பிரித்விராஜுடைய நடிப்பு இன்னும் பல வருடங்கள் மறக்க முடியாததாக இருக்கும். உங்களுடைய கடின உழைப்பிற்கும் அர்ப்பணிப்புக்கும் சல்யூட் சார்” என குறிப்பிட்டுள்ளார். 

இதனிடையே மாதவன், ஒளிப்பதிவாளர் ரவி.கே சந்திரன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி அவர்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டனர். அவர்களுக்கு பிரித்விராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.