Skip to main content

'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியீடு!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

rrr movie glimpse update out now

 

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' படங்கள் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றன. இப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமௌலி பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் மற்றும் ஜீனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தை இயக்கிவருகிறார். இதில் ஆலியா பாட், சமுத்திரக்கனி, பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 400 கோடி பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5  மொழிகளில்  வெளியாகவுள்ளது.

 

கடந்த ஜூன் மாதமே 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக படம் வெளியாவதில் சிக்கல் எழுந்தது. அதனையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.  தற்போது கரோனா பரவல் குறைந்து நிலைமை சீராக இருப்பதால் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு தீவிரம் காட்டிவருகிறது. மேலும், 'ஆர்.ஆர்.ஆர்.' திரைப்படம் வரும் ஜனவரி 7ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

 

இந்நிலையில், 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1ஆம் தேதி காலை 11 மணிக்குப் படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அறிந்த ரசிகர்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்