ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் 2.0 . கடந்த வருடம் நவம்பர் மாதம் 28ஆம் தேதி இப்படம் வெளியானது. லைகா நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
500 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட இப்படம், எதிர்பார்த்த வசூலை வாரிக்குவிக்காமல் போனது. இதனால் சீனாவில் ரிலீஸ் செய்யும்போது அதிக திரைகளில் வெளியிட்டு வசூலை வாரிக்குவித்துவிடலாம் என்று கணக்குப்போட்டது தயாரிப்பு நிறுவனம். சொன்னதைபோலவே சுமார் 56,000 ஸ்கிரீன்களில் இப்படத்தை அடுத்த மாதம் வெளியிடுவதாக படக்குழு அறிவித்திருந்தது. தமிழ் படம் ஒன்று சீனாவில் வெளியாகுவது இதுவே முதல் முறை என்கிற சாதனையை படைக்க இருந்தார் ரஜினி.
2.0 படத்தை சீனாவில் வெளியிட முடிவு செய்தனர். ஹெச்ஒய் மீடியா நிறுவனம் வெளியிடுவதாக இருந்தது. ஆனால், தற்போது இந்த முடிவில் இருந்து அவர்கள் பின்வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.காரணம், இதற்குமுன் சீன மொழியில் வெளியான ‘பேட்மேன்’ திரைப்படம், சீனாவில் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் நஷ்டம் ஏற்படுத்தியது. 2.0 திரைப்படம் 25 மில்லியன் டாலர்கள் வசூல் செய்தால் மட்டுமே அந்த நிறுவனத்துக்கு லாபகரமாக அமையும். ஆனால், 2.0 வெளியாகும் சமயத்தில் ‘தி லயன் கிங்’ படத்தையும் வெளியிடத் திட்டமிடப்பட்டிருப்பதால், படத்தை வெளியிட்டு நஷ்டத்தைச் சந்திப்பதைவிட, வெளியிடாமல் குறைந்த அளவு நஷ்டத்தைச் சமாளிக்கலாம் என்று அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் அந்நிறுவனம் வெளியிடும் என்று தெரிகிறது.