Skip to main content

"பெண்களுக்கு சம உரிமை கொடுங்கள்" - கபாலி பட நடிகை ஆதங்கம்

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

radhika apte says We live in a country where there is a lot of patriarchy

 

2012ல் பிரகாஷ் ராஜ் இயக்கி நடித்த 'தோனி' படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், ரஜினியின் கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். இதனிடையே கார்த்தியின் 'அழகுராஜா', 'சித்திரம் பேசுதடி 2' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்தியில் அவர் புதிதாக நடித்துள்ள படம் 'மிஸ் அண்டர்கவர்' (Mrs Undercover). துர்கா என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ள இப்படம் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. அதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

 

அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ராதிகா ஆப்தே, சினிமாவில் பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "ஆணாதிக்கம் அதிகம் உள்ள ஒரு நாட்டில்தான் நாம் வாழ்கிறோம். பல பெண்கள் தங்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க இரவு பகலாக உழைக்கிறார்கள். ஆனால் இன்னும் கவனிக்கப்படாமல் இருக்கிறார்கள். அது போன்று ஒரு கதாபாத்திரம் தான் துர்கா" என்றார். 

 

மேலும், "இப்போது உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. அதாவது சம உரிமை, சம ஊதியம், சமமான வேலை வாய்ப்புகள், சமமான அங்கீகாரம் ஆகியவற்றுக்காக அனைவரும் போராடிக் கொண்டிருக்கின்றனர். திரைத்துறை, சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை பிரதிபலிப்பதாகவே இருந்து வருகிறது" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்