Skip to main content

"புது அனுபவமாக இருக்கும்" - 'கொலை' குறித்து தனஞ்செயன்

Published on 06/07/2023 | Edited on 06/07/2023

 

producer Dhananjayan about kolai movie

 

தமிழ் சினிமாவில் இசை, நடிப்பு, படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பிசியாக பணியாற்றி வரும் விஜய் ஆண்டனி, அண்மையில் வெளியான 'பிச்சைக்காரன் 2' படத்தைத் தொடர்ந்து 'கொலை', 'ரத்தம்', 'மழை பிடிக்காத மனிதன்', 'வள்ளி மயில்' உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் கொலை படம் வருகிற 21ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதில் ரித்திகா சிங், மீனாக்‌ஷி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ்' தயாரிப்பில் பாலாஜி கே. குமார் இயக்க கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். 

 

மர்மமான முறையில் ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை சஸ்பென்ஸ் கலந்து த்ரில்லிங்குடன் சொல்லியிருப்பது போல் உருவாகியுள்ளது இப்படம். இப்படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான தனஞ்செயன், "இப்படத்தில் வித்தியாசமான முறையில் ஒளிப்பதிவு, சிஜி உள்ளிட்ட துறைகளில் முயற்சி செய்துள்ளோம். இயல்பாக இருந்த காட்சிகள் சிஜி செய்யப்பட்டவுடன் வேறு விதமாக பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளன. கண்டிப்பாக ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். இதுவரை எந்த படத்திலும் பார்க்காத விஷயம் இதில் இருக்கிறது. 

 

சமீபத்தில் வெளியான போர்தொழில் படத்தில் சரத்குமாருக்கு அசிஸ்டண்டாக அசோக் செல்வன் வருவார். அதே போல் இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு அசிஸ்டண்டாக ரித்திகா சிங் வருகிறார். இதை நாங்கள் முதலிலேயே எடுத்துவிட்டோம். ஆனால் போர்தொழில் இப்படத்துக்கு முன்னதாக வெளியாகி நன்றாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் கொலையாளியை முதலிலேயே காண்பித்து அவர் எப்படி இந்த கொலையை செய்திருப்பார் என்ற கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம். இது பார்ப்பதற்கு புது அனுபவமாக இருக்கும்" என்றார்.  

 

 

சார்ந்த செய்திகள்