Skip to main content

ரசிகர்களுக்கு 'பாகுபலி' பிரபாஸ் கொடுத்த இன்ப விருந்து 

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
prabhas

 

ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான சென்ற அக்டோபர் 23ம் தேதி தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார். இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

 

 

 

மேலும் ரசிகர்களுக்கு இது மிகப்பெரும் விருந்தாக அமைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் "சாஹூ" படம் மிகுந்த பொருட்செலவில் வளர்ந்து வருகிறது.  இப்படத்தில் பிரபாஸின் நாயகியாக ஷ்ரதா கபூர் நடிக்க ஜாக்கி ஷிராஃப், அருண் விஜய், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, சுங்கி பாண்டே, மகேஷ் மஞ்சிரெக்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வம்சி, பிரமோத், விக்ரம் அவர்களின் யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''வெள்ளிக்கிழமை தமிழ் மக்களுக்கு ஒரு சர்பிரைஸ் இருக்கு'' - பாகுபலி பிரபாஸ்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள 'சாஹோ' படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் நடிகர் பிரபாஸ் கலந்துகொண்டு பேசும்போது... 

 

prabhas

 

 

''பாகுபலிக்கு பிறகு வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். ஆனால் 'சாஹோ' இயக்குனர் சுஜீத் என்னை விடவில்லை. அதுபோக இந்த படமும் என் இரண்டரை வருடங்களை எடுத்துக்கொண்டது. ஏனென்றால் இந்த படத்தின் காட்சிப்படுத்தல் அப்படி. அதற்கு இரண்டரை வருடங்கள் தேவைபட்டது. இல்லையென்றால் படம் இந்த அளவுக்கு மிக பிரமாண்டமாக வெளிவந்திருக்காது. இந்த படம் உலகம் முழுக்க உள்ள பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. அது நம் கண்களுக்கு கண்டிப்பாக விருந்து படைக்கும். எனக்கு நேரடி தமிழ் படங்கள் பண்ண ஆசை. அது கூடிய விரைவில் நடக்கும் என நம்புகிறேன். தமிழ் ரசிகர்களுக்காக வரும் வெள்ளியன்று ஆகஸ்ட் 23ஆம் தேதி ஒரு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருக்கிறத" என்றார்.

 

 

Next Story

''அவர் கார் ஏறும் வரை கூட வந்து வழி அனுப்புவார்'' - அருண் விஜய்  

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

பாகுபலி பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள சாஹோ படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய் கலந்துகொண்டு பேசும்போது... 

 

arun vijay

 

பாகுபலிக்கு பிறகு பிரபாஸ் போன்ற ஒரு நடிகர் இந்த மாதிரி மாதிரியான படத்தை தேர்வு செய்ததற்கு ஒரு தைரியம் வேண்டும். அதுவும் இயக்குனர் சுஜீத் மேல் இவர் வைத்த நம்பிக்கைக்கு ஹேட்ஸ் ஆஃப். இரண்டரை வருடத்திற்கு பிறகு வரும் படம் என்பதால் பிரபாஸ் மிகவும் கவனமாக இருந்தார். அவர் நினைத்திருந்தால் எவ்வளவோ பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் இந்தப்படத்தை அவர் பெரிதும் நம்பியிருக்கிறார். அவர் சாதாரணமாக நடந்து போகக்கூடிய ஒரு ஷாட்டிற்கு அவ்வளவு மெனக்கெடுவார். அந்த அளவு அவர் சினிமா மேலும், நடிப்பு மேலும் பற்று உள்ளவர். இன்னும் சொல்லப்போனால் பிரபாஸ் எந்த அளவு பணிவானவர் என்றால் அவருடன் பணிபுரியும் எந்த ஆர்டிஸ்ட்டாக இருந்தாலும் அவர்கள் கார் ஏறும் வரை உடன் சென்று வழி அனுப்பி வைத்துவிட்டுதான் செல்வார். அந்த அளவு அக்கறையானவர். இதுபோல் ஒருவருடன் பணிபுரிந்து சந்தோஷமாக உள்ளது. 

 

 

இப்படத்தில் எனக்கு நிறைய சவால்கள் இருந்தது. குறிப்பாக ஹிந்தி பேசி நடிப்பதில் சிரமப்பட்டேன். இருந்தும் ஒரு பண்டிட் உதவியுடன் நன்றாக ஹிந்தி பேசியுள்ளேன். ஒருமுறை என் ஹிந்தி வசன உச்சரிப்பை பார்த்து உடன் நடித்த மந்திரா பேடி என்னை வெகுவாக பாராட்டினார். ஆனால் நானோ அதை மனப்பாடம் செய்து ஒப்பித்தேன் என உண்மையை சொன்னேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். இருந்தும் எனக்கு வேறொருவர் தான் ஹிந்திக்கு குரல் கொடுத்துள்ளார். எனக்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது'' என்றார்.