Skip to main content

ராமராக பிரபாஸ், சீதையாக இணையும் பிரபல நடிகை.. 

Published on 28/11/2020 | Edited on 28/11/2020
krithi sanon

 

 

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் உருவாகும்  படம் 'ஆதி புருஷ்'. இப்படத்தில், ராமராக பிரபாஸும், ராவணனாக சயிஃப் அலிகானும் நடிக்கவுள்ளனர். படத்தை பூஷண் குமார் தயாரிக்கிறார். இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

 

ஆதி புருஷ் படத்தில் கதாநாயகியாக, சீதை வேடத்தில் நடிப்பதற்கு, முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்தநிலையில், சீதை வேடத்தில் நடிக்க, பிரபல இந்தி நடிகை  க்ருத்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகிவுள்ளது. இவர் தெலுங்கில், மகேஷ் பாபுவுடன் 1: நெனோகடைன் என்ற படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

'ஆதிபுருஷ்' படக்குழுவினர்  தங்களுடைய வெளியீட்டுத் தேதியை ஏற்கனவே  அறிவித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம், 2022ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 11ஆம் தேதி  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்