Skip to main content

நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் நடிக்கும் 'ஹட்டி'

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

 Nawazuddin Siddiqui, Anurag Kashyap in Haddi movie update

 

ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அக்‌ஷத் அஜய் சர்மா இயக்கத்தில் நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹட்டி. ரோஹன் இசைப் பணிகளை கவனிக்கிறார். இப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

 

'ஹட்டி' தலைநகரம் முழுவதும் செயல்படும் அழுத்தமான குற்றப் பின்னணியை, குற்றவாளிகளின் உலகை அழுத்தமாகக் காட்சிப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

இப்படம் குறித்து அனுராக் காஷ்யப் கூறுகையில், “ஹட்டியை உருவாக்க அக்‌ஷத் மற்றும் அவர் குழு உழைத்த கடின உழைப்பைக் கண்டு, நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அக்‌ஷத் எனக்குப் பல வருடங்களாக உதவி இயக்குநராக உதவியிருக்கிறார். இயக்குநராக அவர் அறிமுகமான படத்திலேயே நடிகராக முன் வரிசையில் இடம் பெறும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது” என்றார். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“1 மணி நேரத்திற்கு 5 லட்சம்” - கண்டிஷன் போட்ட இயக்குநர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Anurag Kashyap fixed a rate for his meeting

பாலிவுட்டில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். தமிழில் விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து ஜி.வி பிரகாஷை வைத்து தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தன்னிடம் சந்திப்பு மேற்கொள்ள கட்டணம் வசூலிக்கவுள்ளதாக அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “எனக்கு  மெசேஜோ அல்லது ஃபோனிலோ யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். என்னுடன் சந்திப்பு மேற்கொள்ள பணம் செலுத்துங்கள் உங்களுக்கான நேரம் கிடைக்கும்” என பதிவிட்டுள்ளார். மேலும், “நான் புதிய நபர்களுக்கு உதவி செய்து நிறைய நேரத்தை வீணடித்திருக்கிறேன். தான் மேதாவி என நினைத்து கொண்டிருக்கும் நபர்களைச் சந்தித்து இனிமேல் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. 

எனவே நான் இப்போது சந்திப்பு மேற்கொள்ள பணம் வாங்குகிறேன். 10-15 நிமிடத்திற்கு 1 லட்சமும் அரை மணி நேரத்திற்கு 2 லட்சமும், 1 மணி நேரத்திற்கு 5 லட்சமும் வசூலிக்கிறேன். இந்த தொகைக்கு நீங்கள் உடன்பட்டால் என்னை அழைக்கலாம் அல்லது கொஞ்சம் தள்ளியே இருங்கள். ஆனால் பணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.  

Next Story

மீண்டும் அதே இயக்குநர் - பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் ஜி.வி. பிரகாஷ்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

ஜி.வி. பிரகாஷ் நடிகராக ரெபல், இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் உள்ளிட்ட படங்களில் பணியாற்றுகிறார். இதில் ரெபல் படம் வருகின்ற 22 ஆம் தேதி வெளியாகிறது. ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் தற்போது பாலிவுட்டில் ஹூரோவாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் இயக்கத்தில் இப்படம் உருவாவதாகவும் இந்தி மற்றும் தமிழில் இப்படம் தயாராகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இணைந்து ஒரு படம் பண்ணுவதாக முன்னரே தகவல் வெளியான நிலையில், தற்போது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

gv prakash make his bollywood debut as actor under anurag kashyap direction

இப்படம் உறுதியாகும் பட்சத்தில் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாவார். ஏற்கனவே இசையமைப்பாளராக அனுராக் கஷ்யப் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான கேங்க்ஸ் ஆஃப் வாஸிப்பூர் படம் மூலம் அறிமுகமானார். இப்படத்திற்கு பின்னணி இசை மட்டும் இசையமைத்திருந்தார். இப்போது இந்தியில் கங்கனா ரணாவத்தின் எமர்ஜென்சி, சூரரைப் போற்று ரீமெக் என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

அனுராக் கஷ்யப், விஜய் சேதுபதியின் இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த லியோ படத்தில் ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார். இப்போது விஜய் சேதுபதியின் மகராஜா, சுந்தர்.சி-யின் ஒன் டூ ஒன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.