Skip to main content

மிரட்டிய நபருக்கு எச்சரிக்கை! நமீதாவுக்கு ரசிகர்கள் ஆதரவு...

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நமீதா. இதனை அடுத்து ஏய், பில்லா, அழகிய தமிழ்மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். பின்னர், அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தற்போது டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட்டாகவும் ஜட்ஜ்ஜாகவும் வருகிறார்.
 

namitha

 

 

இந்நிலையில் நடிகை நமீதாவை சமூக வலைத்தளத்தில் ஒருவர் அநாகரீகமாக தொடர்புகொண்டுள்ளார். அதை வன்மையாகக் கண்டித்தும் அப்படி அந்தச் செயலை செய்தநபரின் புகைப்படத்தைப் பதிவிட்டு நடிகை நமீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில், “என்னுடைய அமைதியை வீக்னஸ் என்று தவறாக எடுத்துகொள்ளாதீர்கள். உண்மையான ஆணுக்குப் பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பது தெரியும். எந்த மாதிரியான வாழ்க்கை பாதையை கொண்ட பெண்ணாக இருந்தாலும் அவருடைய சொந்த தாயை அவமதிப்பது போன்றே உணர்வார்கள் அவர்கள். கடவுள் துர்கை அம்மனுக்காக ஒன்பது நாட்கள் துர்கா பூஜை நடத்துவதிலும், பெண்கள் தினத்தன்று வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக பொது வாழ்வில் அவர்களை மதியுங்கள். அதுதான் முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார். 

நமீதாவின் இந்தப் பதிவை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களும், இணையவாசிகளும் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இன்ஸ்டாகிராம் காதலன்தான் வேணும்..’ - குழந்தைகளை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
 woman who left her children behind and went with her Instagram boyfriend

சேலம் மாவட்டம் தொளசம்பட்டி அருகே உள்ள மானாத்தாள் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (29). இவருடைய மனைவி கீர்த்தனா(பெயர்மாற்றப்பட்டுள்ளது) (28). இவர்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 9 மற்றும் 6 வயதுகளில் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான கார்த்தி, பந்தல் போடுவது, மூட்டை தூக்குவது என கிடைத்த வேலைகளுக்குச் சென்று வருகிறார். உள்ளூரில் வேலை கிடைக்காதபட்சத்தில் அவ்வப்போது வெளிமாநிலத்திற்கும் வேலை தேடிச்சென்றுவிடுவார்.

கணவர் வீட்டில் இல்லாத சமயங்களில் கீர்த்தனா பெரும்பாலான நேரத்தை செல்போனில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் நேரத்தைச் செலவிட்டு வந்துள்ளார். குழந்தைகளைக்கூட சரியாக கவனித்துக் கொள்வதில்லையாம். இதனால் கார்த்தி அடிக்கடி கீர்த்தனாவை திட்டியுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, குழந்தைகளை வீட்டில் தவிக்க விட்டுவிட்டு, கீர்த்தனா திடீரென்று மாயமானார். வெளியே சென்றிருந்த கார்த்தி, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், தோழிகள் விசாரித்துப் பார்த்தும் கீர்த்தனா எங்கு சென்றார் என்ற விவரங்கள் தெரியவில்லை. இதையடுத்து கார்த்தி, தொளசம்பட்டி காவல்நிலையத்தில் மனைவியைக் காணவில்லை என்று புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையில், கீர்த்தனா இன்ஸ்டாகிராமில் அதிகமாக நேரத்தைச் செலவிட்டு வந்ததும், அதன் மூலமாக இளைஞர் ஒருவருடன் அறிமுகம் ஏற்பட்டு, அவருடன் நெருக்கமாக பழகி வந்திருப்பதும் தெரிய வந்தது. அந்த இளைஞருடன் கீர்த்தனா சென்றிவிட்டதும், அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பதுங்கி இருப்பதும் தெரிய வந்தது. அவர்களை மீட்டு அழைத்து வரும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பெற்ற குழந்தைகளை தவிக்க விட்டுவிட்டு இன்ஸ்டாகிராம் காதலனுடன் இளம்பெண் சென்ற சம்பவம் தொளசம்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

வடசென்னை பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து நடிகை நமீதா வாக்கு சேகரிப்பு (படங்கள்)

Published on 03/04/2024 | Edited on 03/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

அதன்படி, இன்று (03-04-24) காலை 11 மணியளவில், திருவொற்றியூர் பெரியார் நகரில், வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக நடிகை நமீதா வேனில் நின்றபடி சாலைக்கு நடுவில், பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலின் காரணமாக, இருசக்கர வாகனங்கள், மற்றும் கனரக வாகனங்கள் ஊர்ந்தபடியே  சென்றது.