Skip to main content

கமல்ஹாசனை இயக்கும் முத்தையா?

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Muthaiah directing Kamalhaasan next film

 

லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. 

 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் அடுத்ததாக இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  'கொம்பன்', 'குட்டிப்புலி', 'புலிக்குத்தி பாண்'டி உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா தற்போது கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தொடர்ந்து கிராமப்புற கதையை மையமாக வைத்து கமல் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 'விக்ரம்' படமும், 'விருமன்' படமும் முடிந்த பிறகு கமல் மற்றும் முத்தையா படத்தின் பணிகள் தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்