Skip to main content

"இரண்டுமே கடினமாகத்தான் இருந்தது" - தங்கலான் பட அனுபவம் பகிர்ந்த மாளவிகா

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

malavika mohanan shared about thangalaan experience

 

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற் பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்துள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விக்ரமிற்கு அடிபட்டது. இதில் காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்து தற்போது குணமடைந்து வருகிறார். இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் தங்கலான் படப்பிடிப்பு குறித்து ரசிகர் ஒருவர் கேட்டதற்கு பதிலளித்த மாளவிகா, "தங்கலான் நன்றாக உருவாகி வருகிறது. ஒரு தனித்துவமான படைப்பை உருவாக்கி வருகிறோம். இந்த மாதம் படத்தின் கடைசி ஷெட்யூல் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக விக்ரம் சாருக்கு காயம் ஏற்பட்டதால் அவர் குணமடைந்த பிறகு விரைவில் மீண்டும் தொடங்குவோம்." எனப் பதிவிட்டுள்ளார். 

 

மேலும் விக்ரமுடன் பணியாற்றியதை பற்றி கேட்டதற்கு, "​​விக்ரம் சார் இல்லாத இப்படத்தின் பயணத்தை என்னால் நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு இடத்திலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு உதவியிருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர்.  சக நடிகராக ஊக்குவிப்பவர். அவரது நகைச்சுவை உணர்வு வேற லெவல்" என்றார். 

 

இதை தொடர்ந்து ரசிகர் ஒருவர் தங்கலான் படத்திற்கு உடல் ரீதியாக ரெடியாவது கஷ்டமாக இருந்ததா அல்லது மன ரீதியாக ரெடியாவது கஷ்டமாக இருந்ததா எனக் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர், "எல்லா வகையிலும் நான் நடித்ததில் கடினமான படம்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்ரம் மீது காவல் நிலையத்தில் புகார்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
case against vikram regards veera dheera sooran movie poster

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

இதையடுத்து சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அடுத்ததாக துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் இப்படத்தில் இனைந்துள்ளதாக அறிவிப்புகள் வெளியானது. 

இதனைத் தொடர்ந்து கடந்த விக்ரம் பிறந்தநாளான 17ஆம் தேதி, விக்ரமிற்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ‘வீர தீர சூரன்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. மேலும் டீசரில் விக்ரம் துப்பாக்கியுடன் வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இதையடுத்து அதே நாளில் படத்தின் டைட்டில் அடங்கிய புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது. அதில் விக்ரம் தனது இரு கைகளிலும் அறுவா வைத்திருக்கும்படி புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

case against vikram regards veera dheera sooran movie poster

இந்த நிலையில் அந்த போஸ்டரை சுட்டிக்காட்டி விக்ரம் மீது ஆன்லைன் வாயிலாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை சென்னை கொருக்குப்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ செல்வம் என்பவர் கொடுத்திருக்கும் நிலையில் அந்த புகாரில், “விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் போஸ்டரில் விக்ரம் அரிவாள்களுடன் இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. விக்ரம் இளைஞர்கள் மத்தியில் தவறான எண்ணத்தை கொண்டு செல்கிறார். அதனால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.