Skip to main content

அண்ணனாக தாலாட்டும் தனுஷ்; அடுத்த அப்டேட்டை வெளியிட்ட 'மாறன்' படக்குழு 

Published on 18/02/2022 | Edited on 18/02/2022

 

maaran second song release date announced

 

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் 'மாறன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்க, மகேந்திரன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட்  உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 'மாறன்' படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இருவரும் பத்திரிகையாளராக நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலும், அப்பாடலுக்கு தனுஷ் ஆடிய நடனமும் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் தற்போது அடுத்த பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி அண்ணன்  தங்கை சென்டிமென்டை வைத்து உருவாகியுள்ள "அண்ணனா தாலாட்டும்" என்று பாடல் நாளை(19.2.2022) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்