Skip to main content

"நடிகை சித்ரா மரணத்தில் முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு" - பரபரப்பை கிளப்பிய ஹேம்நாத்

Published on 29/04/2022 | Edited on 29/04/2022

 

"Leading political leader linked to actress Chitra's murder" - Hemnath

 

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு தனியார் ஹோட்டலில் சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததைக் கருத்தில் கொண்டு ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம். சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி வந்தது. 

 

இந்நிலையில் ஹேம்நாத், சித்ராவின் மரணத்தில் ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், "சித்ரா மரணத்திற்கு காரணமான அரசியல் தலைவரால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. உண்மையை சொன்னால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டுகிறார்கள். நான் உயிருக்கு பயந்து என்னுடைய வழக்கறிஞர் வீட்டில் தங்கியிருக்கிறேன். எனது மனைவியின் மறைவிற்கு காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்கும் வரை நான் உயிர் வாழ விரும்புகிறேன். ஒரு வேளை அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் முன்னரே இறந்துவிடும் நிலை வந்தால் என் மனைவி இறப்பதற்கு முன் என்னிடம் கூறிய தகவல்களை வெளியிடுவேன்" என கூறியுள்ளார். ஹேம்நாத் தெரிவித்திருக்கும் இந்த செய்தி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்து இந்த வழக்கில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகை சித்ரா மரணம் தொடர்பான வழக்கு - நீதிமன்றம் புது உத்தரவு

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

actress chithra case update

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை, குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். 

 

ஹேம்நாத், அவர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த மனுவை கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம். மேலும் விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டும் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை" என குறிப்பிடப்பட்டிருந்தது.

 

இந்த மனு இன்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் விசாரணையை சென்னை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற நீதிபதி மறுத்துவிட்டார். மேலும் வழக்கின் விசாரணையை ஆறு மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 


 

Next Story

நடிகை சித்ரா வழக்கில் தந்தை எடுத்த திடீர் முடிவு 

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

 A sudden decision taken by actress Chitra's father

 

கடந்த 2021 ஆம் ஆண்டு சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது வரை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சித்ரா மரணம் தொடர்பான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் வேண்டுமென்றே சித்ராவின் கணவர் ஹேம்நாத் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்து குழப்பி வருகிறார். 2021 ஆம் ஆண்டிலிருந்து வழக்கின் விசாரணை குற்றச்சாட்டு பதிவு செய்யும் கட்டத்திலேயே உள்ளது. வயது மூப்பு காரணமாக என்னால் வழக்கின் விசாரணைக்காக திருவள்ளுவர் நீதிமன்றத்திற்கு சென்று வருவதற்கு சிரமமாக இருக்கிறது. சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றி விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்' என கோரிக்கை வைத்துள்ளார்.